RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

115041290

தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டத் தலைமை கூட்டுறவு வங்கி மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிப்பு

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்ட்) மோசடிகள் - வகைப்படுத்துதல், அறிக்கை செய்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றிற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான உத்தரவுகளை கடைபிடிக்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), மே 06, 2024, தேதியிட்ட உத்தரவு மூலம், தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டத் தலைமை கூட்டுறவு வங்கி (வங்கி) மீது 50,000 (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதித்துள்ளது.

மார்ச் 31, 2023 தேதி அன்று இருந்த வங்கியின் நிதி நிலை அடிப்படையில் நபார்ட் வங்கி சட்டபூர்வ ஆய்வு நடத்தியது. நபார்ட் வங்கியின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காதது தொடர்பான மேற்பார்வை ஆய்வுகள் மற்றும் இது தொடர்பான கடிதங்களின் அடிப்படையில், மேற்கூறப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக வங்கி மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு வங்கியின் தனிப்பட்ட பதில் மற்றும் நேர்முக விசாரணையின் போது பெறப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் ஆகியவற்றை பரிசீலனை செய்த போது, வங்கி, மோசடிகளை தாமதமாக அறிக்கை செய்ததாக நபார்ட் வங்கியால் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட காரணத்தால், பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது.

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல. மேலும், இந்த பண அபராதம் விதிக்கப்படுவது, வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கியால் தொடங்கப்படும் வேறு எந்த நடவடிக்கைக்கும் பாரபட்சம் இல்லாமல் இருக்கும்.

(யோகேஷ் தயாள்)        
தலைமை பொது மேலாளர்

பத்திரிகை வெளியீடு: 2024-2025/274

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?