25 பைசா நாணயங்கள் இன்னும் பரிமாற்றத்துக்கு உரியன தெளிவுபடுத்துகிறது ரிசர்வ் வங்கி - ஆர்பிஐ - Reserve Bank of India
25 பைசா நாணயங்கள் இன்னும் பரிமாற்றத்துக்கு உரியன தெளிவுபடுத்துகிறது ரிசர்வ் வங்கி
பத்திரிக்கைக் குறிப்பு
|
|
பத்திரிக்கைத்தொடர்பு அலுவலகம்,
மத்திய அலுவலகம், தபால் பெட்டி எண் 406,
மும்பை – 400 001.
|
e-mail: helpprd@rbi.org.in
|
நவம்பர் 3, 2005
25 பைசா நாணயங்கள் இன்னும் பரிமாற்றத்துக்கு உரியன
தெளிவுபடுத்துகிறது ரிசர்வ் வங்கி
கடைகள், வணிக நிறுவனங்கள், பயன்பாட்டுச் சேவை வழங்குவோர் மேலும் பொதுத்துறை நிறுவனங்களும் அரசுத்துறை நிறுவனங்களும் கூட 25 பைசா நாணயங்களை ஏற்றுக்கொள்வதில்லை என்று பொதுமக்களிடமிருந்து ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் வந்துள்ளன. வணிகர்களிடமும் வியாபார வட்டத்திலும் 25 பைசா செல்லாது என்றும் அது புழக்கத்தில் இல்லை என்றும் பொதுவான கருத்து நிலவுகிறது என்று தெரியவருகிறது. அத்தகைய அறிக்கைகளுக்கு எந்தவித அடிப்படையும் இல்லை என்பதை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்த விரும்புகிறது. மேலும் 25 பைசா மற்றும் 50 பைசா நாணயங்கள் எளிதில் கிடைக்கின்றன. அவை இப்போதும் செல்லுபடியாகும். எனவே தொடர்புடையோர் அனைவரும் எந்தவித தயக்கமும் இல்லாமல் 25 பைசா நாணயங்களையும் 50 பைசா நாணயங்களையும் முன்பு போலவே பரிமாற்றத்தில் ஏற்றுக் கொள்ளலாம்.
ரகுராஜ்
துணை பொதுமேலாளர்.
பத்திரிகை வெளியீடு 2005-2006/537