RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78441361

தனிநபர்கள் அன்னியச்செலாவணி பெறுவதற்கான வழி எளிதாக்கப்பட்டுள்ளது : வாணிகமல்லாத நடப்புக்கணக்கு நடவடிக்கைகளைக்கையாள மேலும் சில நிறுவனங்களுக்கு அனுமதி

 

 

பத்திரிக்கை குறிப்பு

 

இந்திய ரிசர்வ் வங்கி

 

பத்திரிக்கை தொடர்பு அலுவலகம், மத்திய அலுவலகம்,

தபால் பெட்டி எண் 406, மும்பை – 400 001

தொலை பேசி : 22660502 – பாக்ஸ் :22660358, 22703279

 

மார்ச் 6, 2006

 

தனிநபர்கள் அன்னியச்செலாவணி பெறுவதற்கான

வழி எளிதாக்கப்பட்டுள்ளது :

வாணிகமல்லாத நடப்புக்கணக்கு நடவடிக்கைகளைக்

கையாள மேலும் சில நிறுவனங்களுக்கு அனுமதி

 

தனிநபர்கள் அன்னியச்செலாவணி பெறுவதற்கான  வழி முறையை எளிதாக்கும் அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி இன்று ஒரு சுற்றறிக்கை மூலம் வெளியிட்டது. இந்த சுற்றறிக்கை மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வட்டார கிராமப்புற வங்கிகள் வாணிகமல்லாத நடப்புக்கணக்கு நடவடிக்கைகள் தொடர்பாக அன்னியச்செலாவணி பெற்றுக்கொள்ளவும், அளிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளன. 

 

அன்னியச் செலாவணி நடவடிக்கைகள் தாராளமயமாக்கப்பட்ட பிறகு பாமர மக்கள்  ரிசர்வ் வங்கியை அணுகாமலேயே வாணிகமற்ற நடப்புக்கணக்கு நடவடிக்கைகளைத் தொடர முடிகிறது.  சுற்றுலா, மருத்துவ சிகிச்சை, வெளிநாட்டுக்கல்வி போன்ற பல நடப்புக்கணக்கு நடவடிக்கைகள் வாணிகத்திற்கு அப்பாற்பட்டவை.  இதற்கான் அன்னியச்செலாவணியை தனிநபர்கள் எளிதில் பெற முடியும்.  தற்போது அனுமதியளிக்கப்பட்ட வணிகர்கள் மூலமே அன்னியச்செலாவணியைப் பெற முடியும் என்ற நிலை உள்ளது.  தேர்ந்தேடுக்கப்பட்ட முழுநேர செலாவணி மாற்றுபவர்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வட்டார கிராமப்புற வங்கிகள் ஆகியவை இந்தக் காரணங்களுக்காக அன்னியச்செலாவணி கொடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து தனிநபர்கள் அன்னியச்செலாவணி பெறும் வழி எளிதாக்கப்பட்டுள்ளது.

 

 

தனிப்பட்ட பயணங்கள், வாணிக நோக்குள்ள பயணங்கள், உலக மாநாடுகளில் கலந்து கொள்வதற்கான கட்டணங்கள், சிறப்புப் பயற்சிக்கான  கட்டணங்கள், உலக அளவிலான  நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் கலந்துகொள்வதற்கான்  செலவினங்கள் (பயிற்சி, ஊக்க அதரவு, பரிசுத்தொகை ஆகியவை), திரைப்பட ஷூட்டிங், வெளிநாட்டில் சிகிச்சை, வெளிநாட்டில் கல்வி, வெளிநாட்டில் உள்ள பல்களைக்கழகங்களோடு செய்து கொண்ட ஏற்பாட்டிற்கான செலவீனம், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடக்கும் தேர்வுகளுக்கான  கட்டணங்கள், வேலை வாய்ப்பு மற்றும் வேலைத்தேர்வுக்கான  கட்டணங்கள், குடியேற்றம் மற்றும் குடியேற்றம் தொடர்பான ஆலோசனைக்கான கட்டணங்கள், வெளிநாட்டு வேலைக்கான்  மதிப்பீடு கட்டணம், திறன்/தகுதி மதிப்பீடு கட்டணம், விஸா கட்டணம், பன்னாட்டு நிறுவனங்களில் பதிவு, உறுப்பினர் கட்டணம், சந்தா ஆகிய காரணங்களான அன்னியச்செலாவணியை அளிக்க இரண்டாவது வகையினர் என்று அறியப்படும் இந்த அதிகாரபூர்வ வணிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அன்னியச்செலாவணியைக்கொடுப்பதற்கான  இடைப்பட்ட தளத்தை சீர்படுத்தி, விரிவாக்கியதின் மூலம் பாமர மக்களுக்கு அன்னியச்செலாவணி எளிதில் கிடைக்கச்செய்யலாம், போட்டியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கான்  சேவை வலுப்படும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. 

 

அதிகாரபூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டவர்களின் செயல்திறனை தாராளமயமாக்கவும் எளிதாக்கவும் வேண்டி, ரிசர்வ் வங்கி ஒரு உட்குழுவை நியமித்திருந்தது.  தேவைகளை அறிதல், பாதுகாப்புகளை நிச்சயித்தல், பரவலான மற்றும் அதிகமான அளவில் செலாவணி பெறுவதற்கான வழிகளைக்கண்டறிதல் ஆகியவை இந்தக்குழுவின் நோக்கங்களாகும்.  உட்குழுவின் அறிக்கை ரிசர்வ் வங்கி இணைய தளத்தில் வைக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டது.  அதன் பரிந்துரைகளைப்பற்றிய கருத்துக்களை அறிந்த பிறகு இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

 

 

2006 ஆம் வருட மார்ச் 6ஆம் தேதியிட்ட இது தொடர்பான .பி.  (டிஐஆர் வரிசை) சுற்றறிக்கை எண். 25 ரிசர்வ் வங்கியின்  வலைத்தளத்தில் உள்ளது. (http.//www.rbi.org.in).

 

 

 

அல்பனா கில்லாவாலா

தலைமைப் பொதுமேலாளர்

 

 

 

பத்திரிக்கைக் குறிப்பு : 2005-2006/1124

 

 

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?