PMJDY பிரைம் மினிஸ்டர் ஜன்தன் யோஜனா கீழ் உள்ள கணக்குகள் – எச்சரிக்கை நடவடிக்கைகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
PMJDY பிரைம் மினிஸ்டர் ஜன்தன் யோஜனா கீழ் உள்ள கணக்குகள் – எச்சரிக்கை நடவடிக்கைகள்
அறிவிப்பு எண் 165 நவம்பர் 29, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் PMJDY பிரைம் மினிஸ்டர் ஜன்தன் யோஜனா கீழ் உள்ள கணக்குகள் – எச்சரிக்கை நடவடிக்கைகள் “பணம் எடுத்தல் – வாராந்திர வரம்பு“ என்பது குறித்து எங்களின் நவம்பர் 25, 2016 தேதியிட்ட சுற்றறிக்கை DCM (Plg.) No.1424/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். படிப்பறிவில்லாத ஏழை விவசாயிகள், கருப்புப் பணப் பேர்வழிகளின் செய்கைகளால் பாதிக்கப்பட்டு, பினாமி சொத்துப் பரிவர்த்தனை மற்றும் கருப்புப்பண ஒழிப்புச் சட்டத்தின் பிடியில் சிக்கி, மோசமான விளைவுகளை சந்திப்பதைத் தடுக்கும் பொருட்டு, பின்வரும் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நவம்பர் 09, 2016க்குப் பிறகு பழைய ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் PMJDY கணக்குகளில் செலுத்தப்படுமானால், அத்தகைய கணக்குகளில் நடைபெறும் பரிவர்த்தனைகள் பின்வரும் வகையில் கவனிக்கப்படும்.
இங்ஙனம் (P. விஜயகுமார்) |