கணக்குப் புத்தகம்/அறிக்கையில் கிளையின் முகவரியும், தொலைபேசி எண்ணும் - ஆர்பிஐ - Reserve Bank of India
கணக்குப் புத்தகம்/அறிக்கையில் கிளையின் முகவரியும், தொலைபேசி எண்ணும்
RBI/2006-07/123
DBOD.No.Leg.BC.28/09.07.005/2006-07
செப்டம்பர் 01, 2006
பிராந்தியக் கிராம வங்கிகள் நீங்கலாக
அட்டவணையிலுள்ள அனைத்து
வணிக வங்கிகளுக்கும்
அன்புடையீர்,
கணக்குப் புத்தகம்/அறிக்கையில் கிளையின்
முகவரியும், தொலைபேசி எண்ணும்
வாடிக்கையாளர் சேவையிலன் தரத்தை உயர்த்தும் வகையில் அவர்களது கணக்குப் புத்தகம்/அறிக்கையில் கிளையின் முகவரி, தொலைபேசி எண்களைக் குறிப்பிடுவது உபயோகமாக இருக்கும்.
2. வாடிக்கையாளர்களுக்கு அவர்களது கணக்குப் புத்தகங்கள் அல்லது கணக்கு அறிக்கையை வழங்கும்போது வங்கிகள் சம்பந்தப்பட்ட கிளையின் முகவரி, தொலைபேசி எண்கள் இவைகளை குறிப்பிட்டு வழங்கப்படுதலை உறுதி செய்ய வேண்டும்.
3. கிடைத்தமைக்கு ஒப்புதல் அளிக்க.
நம்பிக்கையுள்ள
பிரசாந் சரண்
தலைமை பொது மேலாளர் பொறுப்பு