வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் கணக்கு அறிக்கையில் வங்கியின் முகவரி மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடுதல் - பிராந்திய கிராம வங்கிகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் கணக்கு அறிக்கையில் வங்கியின் முகவரி மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடுதல் - பிராந்திய கிராம வங்கிகள்
RBI/2006-07/134
RPCD. RRB.BC.25/03.05.28A/2006-07
செப்டம்பர் 15, 2006
தலைவர்கள்
பிராந்திய கிராம வங்கிகள்
அன்புடையீர்,
வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் கணக்கு அறிக்கையில் வங்கியின் முகவரி மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடுதல் - பிராந்திய கிராம வங்கிகள்
வங்கி கிளைகளில் வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் சேவையின் தரத்தை உயர்த்தும் விதமாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் கணக்கு அறிக்கையில் வங்கிக் கிளையின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் குறிப்பிடுதல் பயனுடையதாக இருக்கும்.
2. தனது வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் வங்கிக் கணக்குப் புத்தகங்கள் அல்லது கணக்கு அறிக்கைகளில் வங்கிக் கிளையின் முகவரி மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளதை வங்கி உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
3. பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதலை எமது உரிய பிராந்திய அலுவலகத்திற்கு அனுப்புக.
தங்கள் உண்மையுள்ள
G. ஸ்ரீனிவாசன்
தலைமைப் பொது மேலாளர்