சேமிப்புக் கணக்குப் புத்தகத்தில் வங்கிக்கிளையின் முகவரி மற்றும் தொலைபேசி எண் குறிக்கப்படுதல் / கணக்கு அறிக்கை - நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
சேமிப்புக் கணக்குப் புத்தகத்தில் வங்கிக்கிளையின் முகவரி மற்றும் தொலைபேசி எண் குறிக்கப்படுதல் / கணக்கு அறிக்கை - நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள்
RBI/ 2006-07/143
UBD.CO. BPD .Cir No. 12 /09.39.000/ 2006-07
அக்டோபர் 6,2006
அனைத்துத் தொடக்க (நகர்ப்புறக்) கூட்டுறவு வங்கிகளின்
நிர்வாக அதிகாரிகளுக்கும்,
அன்புடையீர்,
சேமிப்புக் கணக்குப் புத்தகத்தில் வங்கிக்கிளையின் முகவரி மற்றும் தொலைபேசி எண் குறிக்கப்படுதல் / கணக்கு அறிக்கை - நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள்
வங்கிகளில் வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் சேவையின் தரத்தை உயர்த்தும் விதமாக வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்கு/ இதர கணக்குப்புத்தகங்கள் மற்றும் கணக்கு அறிக்கைகளில் வங்கிக்கிளையின் முகவரி மற்றும் தொலைபேசி எண் குறிக்கப்படுதல் பயனுடையதாக இருக்கும்.
2. தனது வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் கணக்குப் புத்தகங்கள்மற்றும் கணக்கு அறிக்கைகளில் வங்கிக்கிளையின் முகவரி மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளதை வங்கிகள் உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தங்கள் உண்மையுள்ள
N.S. விஸ்வநாதன்
தலைமைப் பொது மேலாளர் (பொறுப்பு)