அனைத்து பணப் பட்டுவாடா தீர்வு முறை வசதிகள் ஏப்ரல் 01, 2017 அன்று மூடப்பட்டிருக்கும் - ஆர்பிஐ - Reserve Bank of India
அனைத்து பணப் பட்டுவாடா தீர்வு முறை வசதிகள் ஏப்ரல் 01, 2017 அன்று மூடப்பட்டிருக்கும்
Notifi. 2016-17/260 மார்ச் 29, 2017 தலைவர் / நிர்வாக இயக்குநர் அன்புடையீர் அனைத்து பணப் பட்டுவாடா தீர்வு முறை வசதிகள் ஏப்ரல் 01, 2017 மார்ச் 25 2017 தேதியிட்ட சுற்றறிக்கை RBI/2016-17/257 DPSS. CO. CHD. No. 2695/03.01.03/ 2016-17-ல், நிகழ்நேர தீர்வுமுறை (RTGS), தேசிய மின்னணு பணப் பரிமாற்றம் (NEFT) போன்ற சிறப்புத் தீர்வு முறை நடவடிக்கைகள் மார்ச் 25-லிருந்து ஏப்ரல் 01, 2017 வரை சாதாரண வேலை நாட்களைப் போல இயங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது (சனி, ஞாயிறு மற்றும் அனைத்து விடுமுறை நாட்கள் உட்பட). இருப்பினும், மறுபரிசீலனைக்குப் பிறகு அனைத்து தீர்வு முறை வசதிகள் ஏப்ரல் 01, 2017 அன்று மூடப்பட்டிருக்கும். இதுபற்றி ஒரு தனிப்பட்ட செய்தியாக அங்கத்தினர் வங்கிகள் முறையான ஒளிபரப்புச் செய்திமூலம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். 2. இதே நேரத்தில் மார்ச் 30, 31, 2017 அன்று நடத்தப்படும் சிறப்புத் தீர்வு முறைமைகள் செயல்பாடு குறித்து மார்ச் 23, 2017தேதியிட்ட RBI/2016-17/255 DPSS.CO.CHD No /2656/03.01.03/2016-17 இல் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களில் மாற்றம் ஏதுமில்லை. இங்ஙனம் (நந்தா S. தவே) |