இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A-ன்படி அனைத்து வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கி, அமர்நாத் கூட்டுறவு வங்கி லிமிடெட், பெங்களூரு வங்கிக்கு அளிக்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவுகளை நீட்டிக்கிறது
தேதி: ஜனவரி 02, 2019 இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு இந்திய ரிசர்வ் வங்கி, பொதுமக்களின் நலன் கருதி, பொதுமக்களுக்கு தகவல் தரும் வகையில், பெங்களூரு அமர்நாத் கூட்டுறவு வங்கி லிமிடெட்டுக்கு ஏப்ரல் 1, 2013 தேதியிட்ட செயல்படும் காலத்தை நீட்டிக்கும் வழிகாட்டுதல் உத்தரவை, தொடர்ந்த உத்தரவுகளின் படி, சமீபத்திய ஜூலை 02, 2018 உத்தரவின் படியும், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பது அவசியம் என இதன் மூலம் அறிவிக்கிறது. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும் வகையில்) அதிகாரங்களை பயன்படுத்தி, இதன் மூலம் ஏப்ரல் 1, 2013 தேதியிட்ட மறுஆய்வுக்கு உட்பட்டு அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்ட, வழிகாட்டுதல் உத்தரவு, பெங்களூரு அமர்நாத் கூட்டுறவு வங்கி லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவுகளின் செல்லுபடியாகும்தன்மை, கடைசியாக ஜனவரி 4, 2019 வரை நீட்டிக்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவானது, மதிப்பாய்வுக்கு உட்பட்டு ஜனவரி 5, 2019 முதல் ஜூலை 4, 2019 வரை மேலும் ஆறு மாத காலம் நீட்டிக்கப்படும். வழிகாட்டுதல் உத்தரவின் மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் இருக்கும். இந்த வழிகாட்டுதல் உத்தரவு வெளியிடப்பட்டதன் காரணமாக, மேற்படி வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துவிட்டதாகக் கருதக் கூடாது. அதன் நிதி நிலை முன்னேற்றமடையும் வரை கட்டுப்பாடுகளுக்குட்பட்டு, வங்கி தனது வர்த்தகத்தைத் தொடர்ந்திடும். சூழ்நிலைகளைப் பொறுத்து, இந்திய ரிசர்வ் வங்கி இந்த வழிகாட்டுதல்களை மாற்றியமைக்கலாம். அஜித் பிரசாத் செய்தி வெளியீடு: 2018-2019/1537 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: