Amendment in rules for implementation of Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY) - ஆர்பிஐ - Reserve Bank of India
Amendment in rules for implementation of Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY)
RBI/2015-16/437 ஜுன் 30, 2016 தலைமை நிர்வாக அதிகாரி அம்மையீர் / ஐயா பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா யோஜனா (Prime Minister Suraksha Beema Yojana-PMSBY) திட்டங்களை செயல்படுத்து-வதற்கான எங்களது சுற்றறிக்கை DCBR.BPD (PCB) Cir.No.8/12.05.001/2014-15 தேதி மே 05, 2015 - ஐப் பார்க்கவும். 2. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தைச் செயல்படுத்தும் வழிமுறைகள் அரசாங்கத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்டு, சட்டப்படியான அதிகாரியால் மீள்வுரிமைக்கான பிரிவு ஜுன் 01, 2016 முதல் சேர்க்கப்பட்டது. அதன்படி, பதிவு செய்து முதல் 45 நாட்களுக்குள் இறப்பு ஏற்பட்டால், இழப்பீடு வழங்கப்பட மாட்டாது. அதாவது திட்டத்தில் பெயர்பதிவு செய்யப்பட்ட 45 நாட்களுக்குப் பிறகே உறுப்பினருக்கு ரிஸ்க் கவர் தொடங்கும்.. ஆனால், விபத்து காரணமாக இறப்பு ஏற்பட்டால் அதற்கு இந்தப் பிரிவிலிருந்து விலக்கு அளிக்கப்படும். 3. அனைத்துத் தொடக்க (நகர) கூட்டுறவு வங்கிகளும் தேவையான நடவடிக்கை எடுத்து மேற்கூறிய திருத்தத்தைச் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இங்ஙனம் (சுமா வர்மா) |