தங்கப் பத்திரத் திட்டத்தின் அறிவிக்கை எண் 4(25)–W&M/2017-ல் திருத்தம் - ஆர்பிஐ - Reserve Bank of India
தங்கப் பத்திரத் திட்டத்தின் அறிவிக்கை எண் 4(25)–W&M/2017-ல் திருத்தம்
இந்திய அரசாங்கம் புது தில்லி, நாள் – அக்டோபர் 25, 2017 அறிவிக்கை தங்கப் பத்திரத் திட்டத்தின் அறிவிக்கை எண் 4(25)–W&M/2017-ல் திருத்தம் அரசுப் பத்திரங்கள் சட்டம் (38 of 2006) 2006ன் பிரிவு 3 (iii) வழங்கிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, மத்திய அரசு, தங்க பத்திரத் திட்டத்தின் 13 வது பிரிவில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை 2017 அக்டோபர் 06 தேதியிட்ட அறிவிக்கை எண் 4(25)-W&M/2017 மூலம் மாற்றியமைக்கிறது {அறிவிக்கை எண் GSR 1225(E)}. 2. அசல் அறிவிக்கை விதியின் 13 வது பிரிவு, பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது: “13. சட்டபூர்வ நீர்மத்தன்மை விகிதத்திற்கான தகுதி (SLR) – சார்பு/ பிணையம் / அடமானம் / ஆகியவற்றின் மூலம் வங்கிகளால் வாங்கப்பட்ட பத்திரங்கள் மட்டுமே சட்டபூர்வ நீர்மத்தன்மை விகிதத்திற்கு கணக்கில் எடுத்தக் கொள்ளப்படும். |