இந்திய ரிசர்வ் வங்கி – அறிக்கைகள் வாயிலாக தகவல்களை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர் - ஆர்பிஐ - Reserve Bank of India
78496664
வெளியிடப்பட்ட தேதி
நவம்பர் 12, 2016
இந்திய ரிசர்வ் வங்கி – அறிக்கைகள் வாயிலாக தகவல்களை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்
நவம்பர் 12, 2016 இந்திய ரிசர்வ் வங்கி – அறிக்கைகள் வாயிலாக தகவல்களை நடப்பிலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பாக வங்கிகளுக்கு (கூட்டுறவு வங்கிகள் உட்பட) அறிவுறுத்தல்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியது. அதன் ஒரு பகுதியாக, விரிவான அறிக்கை அனுப்பும் முறைகள் வங்கிகளுக்கு வகுக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி மேலும் கூறியதாவது, இதில் செய்து தரப்படும் வசதி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, பொதுமக்கள் வங்கிகளிடம் (கூட்டுறவு வங்கிகள் உட்பட) மாற்றிக்கொள்ளும் குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகள் பற்றிய அறிக்கைகளை, அதிகாரிகள் கவனமாக கண்காணித்து வருகின்றனர். (அல்பனா கில்லவாலா) பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1189 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?