RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78530960

வங்கிக் கம்பெனிகள் (நியமன) விதிகள் 1985 - நியமனத்திற்கு ஒப்புதல் அளிப்பது மற்றும் பற்றுவரவு ஏடுகள் / நிரந்தர வைப்பு ரசீதுகள் ஆகியவற்றில் நியமனதாரரின் பெயரைக் குறிப்ப

RBI/2008-09/406
DBOD. Leg. No.BC.114/09.07.005/2008-09

  மார்ச்  9, 2009

அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராம வங்கிகள் நீங்கலாக)

அன்புடையீர்,

வங்கிக்கம்பெனிகள் (நியமன) விதிகள் 1985 நியமனத்திற்கு ஒப்புதல்
அளிப்பது மற்றும் பற்றுவரவு ஏடுகள்/நிரந்தர வைப்பு ரசீதுகள்
ஆகியவற்றில் நியமனதாரரின் பெயரைக் குறிப்பிடுவது

முறையாக பூர்த்தி செய்யப்பட்ட நியமனம்படிவம், நியமனத்தை நீக்குதல் மற்றும் மாற்றுதல் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டதற்கான முறைமையை சில வங்கிகள் வைத்துக்கொள்ளவில்லை என்பது எங்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  மேலும் சில வங்கிகளில் நியமனத்திற்கான ஒப்புதல் முறைமை, சேமிப்பு வங்கிக்கணக்கு தொடங்கும் படிவத்துடனேயே இருந்தாலும் வாடிக்கையாளருக்கு அத்தகைய ஒப்புதல் கொடுக்கப் படுவதில்லை.  இது தொடர்பாக வங்கி நிறுவனங்கள் வங்கிகள் (நியமன) விதிகள்1985ன் விதி 2(9), 3(8) மற்றும் 4(9)ன்படி வங்கிகள், வைப்புதாரர்கள்/ பாதுகாப்பு பெட்டகத்தை வாடகைக்கு எடுத்திருப்போருக்கு முறையாக பூர்த்தி செய்யப்பட்ட நியமனப்படிவம் நியமனத்தை மாற்றுதல் ஆகியவற்றை பெற்றுக் கொண்டமைக்கு எழுத்துபூர்வமாக ஒப்புதல் அளிக்கவேண்டும்.

2. எனவே வங்கிகள், வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949 மற்றும் வங்கிகள் நிறுவன (நியமன) விதிகள்1985 ஆகியவற்றின் ஷரத்துக்களை கண்டிப்பாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகின்றன.  இதன்படி முறையாக பூர்த்தி செய்யப் பட்ட நியமனபடிவம், நியமனத்தை நீக்குதல் மற்றும் மாற்றுதல் ஆகியவைகளைப் பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதல் வழங்குவதற்கு சரியான முறைமையை ஏற்படுத்திடவேண்டும்.  இத்தகைய ஒப்புதல்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்,  அவர்கள் கேட்காவிட்டல் கூட அளிக்கவேண்டும்.

3. மேலும் வாடிக்கையாளர்சேவை ( BC எண் 75, 2008  நவம்பர் 3) தொகுப்புச் சுற்றறிக்கையின் பத்தி 19.4ஐ தயவுசெய்து பார்க்கவும்.  இதில் வங்கிகள் பற்று வரவு ஏடு/நிரந்தர வைப்பு ரசீதுகளில் “நியமனம் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று எழுதி, நியமன வசதி பயன்படுத்தப்பட்டுள்ளதை தெரிவிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்த அறிவுறுத்தப் படுகின்றனர்.


4. இது தொடர்பாக, ஒரு ஆலோசனை பெறப்பட்டுள்ளது.  இதன்படி பற்றுவரவு ஏடு/நிரந்தர வைப்பு ரசீதுகள் ஆகியவற்றில் நியமிக்கப்பட்டவரின் பெயரை வங்கிகள் குறிப்பிடவேண்டும்.  இம்மாதிரி செய்வது வாடிக்கையாளர்கள்/நியமிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு உதவியாக இருக்கும் என்பதால் வங்கிகள் வாடிக்கயாளர் ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் நியமனம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதோடு கூடவே நியமிக்கப்பட்டவரின் பெயரை பற்று வரவு ஏடு/கணக்குகள் பற்றிய அறிக்கை/நிரந்தர வைப்பு ரசீதுகள் ஆகியவற்றில் குறிப்பிடவேண்டும்.

தங்கள்உண்மையுள்ள

(பிரஷாந்த் சரண்)
தலைமைப் பொது மேலாளர்(பொறுப்பு)

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?