2005 ஆம் ஆண்டிற்கு முன்பு வெளியிடப்பட்ட வங்கிநோட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன - ஆர்பிஐ - Reserve Bank of India
2005 ஆம் ஆண்டிற்கு முன்பு வெளியிடப்பட்ட வங்கிநோட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன
2005ஆம் ஆண்டிற்கு முன்பு வெளியிடப்பட்ட வங்கிநோட்டுகள் 2005ஆம் ஆண்டிற்கு முன்பு வெளியிடப்பட்ட வங்கிநோட்டுகள் அனைத்தும் 2014 மார்ச் 31க்குள் புழக்கத்திலிருந்து திரும்ப்பப் பெறப்படுகின்றன என்று இன்றைய தினம் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 1, 2014லிருந்து, பொதுமக்கள் இத்தகைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகளை அணுகவேண்டும். மறு உத்தரவு வரும்வரை, வங்கிகளால் இத்தகைய நோட்டுகள் மாற்றித்தரப்படும். இந்திய ரிசர்வ் வங்கி மேலும் கூறுவது என்னவென்றால், 2005ஆம் ஆண்டிற்கு முன்பு வெளியிடப்பட்டு, திரும்பப் பெறப்படுகின்ற நோட்டுகளை பொதுமக்கள் எளிதாக அடையாளம் காணலாம். அத்தகைய நோட்டுகளின் பின்புறம் அச்சடிக்கப்பட்ட ஆண்டு பொறிக்கப்பட்டிருக்காது . (தயவு செய்து கீழே கொடுக்கப்படுள்ள உதாரணத்தைப் பார்க்கவும்) 2005ஆம் ஆண்டிற்கு முன்பு வெளியிடப்பட்ட நோட்டுகள், தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையாக இருக்கும் என்று இந்தியவ ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அல்லாதோருக்கும் வங்கிகள் நோட்டுக்களை மாற்றித் தரும் என்பது தெளிவாகிறது. எனினும் ஜூலை 01, 2014லிருந்து பத்திற்கும் மேற்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றவேண்டுமென்றால் வாடிக்கையாளர்அல்லாதோர் தங்களது ஆளறிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவைகளை, எந்த வங்கியின் கிளைக்கு நோட்டுகளை மாற்றச் செல்கின்றாரோ, அங்கு அளித்திட வேண்டும். பொதுமக்கள் இதனால் பீதியடைய தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொள்கிறது. திரும்பப் பெறும் நடவடிக்கைக்குப் பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அஜீத் பிரசாத் பத்திரிகை வெளியீடு: 2013-2014/1472 |