ஏப்ரல் 01, 2017 முதல் ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் கிளைகள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் கிளைகளாகச் செயல்படும் - ஆர்பிஐ - Reserve Bank of India
ஏப்ரல் 01, 2017 முதல் ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் & ஜெய்ப்பூர்,
ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர்,
ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப்
திருவாங்கூர் கிளைகள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின்
கிளைகளாகச் செயல்படும்
மார்ச் 20, 2017 ஏப்ரல் 01, 2017 முதல் ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் & ஜெய்ப்பூர், ஏப்ரல் 01, 2017 முதல் ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் & ஜெய்ப்பூர் (SBBJ), ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் (SBM), ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா (SBP), மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் (SBT) கிளைகள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் கிளைகளாக செயல்படும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்கள் (சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் உட்பட) ஏப்ரல் 01, 2017 முதல் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் வாடிக்கையாளர்களாகக் கருதப்படுவார்கள். ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் & ஜெய்ப்பூர் (SBBJ) வங்கியைக் கையகப்படுத்தும் அரசாணை 2017-ஐயும், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் (SBM) வங்கியைக் கையகப்படுத்தும் அரசாணை 2017-ஐயும், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா (SBP) வங்கியைக் கையகப்படுத்தும் அரசாணை 2017-ஐயும் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் (SBT) வங்கியைக் கையகப்படுத்தும் அரசாணை 2017-ஐயும் இந்திய அரசாங்கம் வெளியிட்டது. பிப்ரவரி 22, 2017 தேதியிட்ட அரசாணை, அரசாணை இதழ் அசாதாரண பகுதி II பிரிவு 3 உபபிரிவு (1)-ல் வெளியிட்ட கருத்தின்படி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சட்டம் 1955 (23 of 1955)-ன் சட்டப்பிரிவு 35 (2)-ன் ஷரத்துப்படி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகியவற்றை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கையகப்படுத்தியதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அல்பனா கில்லவாலா பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2504 |