உரிமம் ரத்து -போபால் நாக்ரிக் சஹகாரி வங்கி லிமிடெட், போபால் - ஆர்பிஐ - Reserve Bank of India
உரிமம் ரத்து -போபால் நாக்ரிக் சஹகாரி வங்கி லிமிடெட், போபால்
ஜனவரி 23, 2018 உரிமம் ரத்து -போபால் நாக்ரிக் சஹகாரி வங்கி லிமிடெட், போபால் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஜனவரி 17, 2018 தேதியிட்ட உத்தரவின் படி , மத்திய பிரதேசத்தின் போபால், போபால் நாக்ரிக் சஹகாரி வங்கி லிமிடெட் உரிமத்தை ஜனவரி 22, 2018 அன்றைய வர்த்தக முடிவின் பின் ரத்து செய்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு வங்கியை மூடுவதற்கான உத்தரவை பிறப்பித்து வங்கிக்கு ஒரு லிக்விடேட்டரை நியமிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி, வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஏனெனில்:
அதன் உரிமத்தை ரத்து செய்ததன் விளைவாக, போபால், மத்தியப் பிரதேசத்தின் போபால் நாக்ரிக் சகாரி வங்கி லிமிடெட் 'வங்கி' வணிகத்தை நடத்துவதற்கு வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 பிரிவு 5 (பி) மற்றும் பிரிவு 56 இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது மற்றும் வைப்புத் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்கப்படுகின்றது. உரிமம் ரத்துசெய்யப்பட்டு, கலைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படுவதால், டி.ஐ.சி.ஜி.சி சட்டம், 1961 ன் படி, போபால், மத்திய பிரதேசத்தின் போபால் நாக்ரிக் சஹாகரி வங்கி லிமிடெட் வைப்புத்தொகையாளர்களுக்கு பணம் வழங்கும் செயல்முறை தொடங்கப்படும். கலைக்கப்பட்டால், ஒவ்வொரு வைப்புத்தொகையாளரும் வழக்கமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திலிருந்து (டி.ஐ.சி.ஜி.சி) ரூ 1,00,000/- (ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே) பண உச்சவரம்பு வரை தனது / அவள் வைப்புகளை திரும்பப் பெற உரிமை உண்டு. அஜித் பிரசாத் பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2010 |