அங்கீகாரச் சான்றிதழ் ரத்து – M/s. பீம் மணி பிரைவேட் லிமிடெட்
மே 04, 2017 அங்கீகாரச் சான்றிதழ் ரத்து – M/s. பீம் மணி பிரைவேட் லிமிடெட் இந்திய ரிசர்வ் வங்கி, பணப்பட்டுவாடா மற்றும் தீர்வு முறைமைச் சட்டம் 2007 இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள பேமென்ட் சிஸ்டம் ஆபரேடர் நிறுவனம் தாமாகவே முன்வந்து சான்றிதழை (COA) திருப்பியளித்தைத் தொடர்ந்து அதை (COA) ரத்து செய்துள்ளது.
இதன் பின்னர், மேற்படி நிறுவனம் ப்ரீபெய்டு கார்டு வெளியீடு வர்த்தகத்தைச் செய்யமுடியாது. எவ்வாறாயினும், M/s. பீம் மணி பிரைவேட் லிமிடெட்டில் PSO என்னும் முறையில் தொடர்புடைய வாடிக்கையாளர்களோ அல்லது வணிகர்களோ ஏதேனும் ஒரு சரியான கோரிக்கை/பாக்கி இருந்தால், மேற்படி சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட தேதி முதல் 03.05.2019 வரை, இரண்டு ஆண்டுகளுக்குள் உரிமைகோரல்களுக்காக இந்நிறுவனத்தை அணுகலாம். (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2981 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: