வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 22 மற்றும் 36 (A) (2)-ன்கீழ் வங்கி வர்த்தக உரிமத்தை ரத்து செய்தும் மற்றும் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கியிலிருந்து கூட்டுறவு சொசைட்டியாக மாற்றமும் செய்யப்பட்டுள்ளது – மாநில போக்குவரத்துப் பணியாளர்கள் கூட்டுறவு வங்கி லிட்., அகமதாபாத் (குஜராத்) - ஆர்பிஐ - Reserve Bank of India
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்)
சட்டப்பிரிவு எண் 22 மற்றும் 36 (A) (2)-ன்கீழ் வங்கி வர்த்தக உரிமத்தை ரத்து
செய்தும் மற்றும் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கியிலிருந்து கூட்டுறவு
சொசைட்டியாக மாற்றமும் செய்யப்பட்டுள்ளது – மாநில போக்குவரத்துப் பணியாளர்கள் கூட்டுறவு வங்கி லிட்., அகமதாபாத் (குஜராத்)
மார்ச் 08, 2017 வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) இந்திய ரிசர்வ் வங்கி, மாநில போக்குவரத்துப் பணியாளர்கள் கூட்டுறவு வங்கி லிட்., அகமதாபாத் (குஜராத்)-க்கு வழங்கியிருந்த உரிமத்தை, ஜனவரி 13, 2017 தேதியிட்ட கடிதத்தின் மூலம் ரத்து செய்துள்ளது என்பதைப் பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 சட்டப்பிரிவு எண் 5 (cci) (சட்டப்பிரிவு 56-ஐயும் படிக்கவும்)-ன்கீழ் கூட்டுறவு வங்கியாக இனி கருத்ப்படமாட்டாது.எனவே கூட்டுறவு வங்கிக்குஉரிய இச் சட்டப்பிரிவுகள் இதற்குப் பொருந்தாது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 சட்டப்பிரிவு எண் 22 (சட்டப்பிரிவு 56-ஐயும் படிக்கவும்)-ன்கீழ் வங்கி வர்த்தகத்தை இது மேற்கொள்ளத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 5 (b)ல் வரையறுக்கப்பட்டுள்ள “வங்கி” வர்த்தகம் சார்ந்த , வைப்புகள் ஏற்பது / திருப்பித் தருதல் உட்பட பரிவர்த்தனைகளுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு: 2016–2017/2134 |