இந்தியாவில் வங்கி வியாபாரத்தை தொடர வழங்கப் - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்தியாவில் வங்கி வியாபாரத்தை தொடர வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டது மேலும் வங்கியின் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 ன் பிரிவு 22 மற்றும் 36A (2) பிரிவுகளின் கீழ் (கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பொருந்தும்) கூட்டுறவுச் சங்கமாக நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் தன்னார்வ மாற்றம் --ஷெர் நாக்ரிக் சககாரி வங்கி லிமிடெட், ஜபல்பூர் (மத்தியப் பிரதேசம்)
பிப்ரவரி 14, 2018 இந்தியாவில் வங்கி வியாபாரத்தை தொடர வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டது மேலும் வங்கியின் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 ன் பிரிவு 22 மற்றும் 36A (2) பிரிவுகளின் கீழ் (கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பொருந்தும்) கூட்டுறவுச் சங்கமாக நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் தன்னார்வ மாற்றம் --ஷெர் நாக்ரிக் சககாரி வங்கி லிமிடெட், ஜபல்பூர் (மத்தியப் பிரதேசம்) வங்கியினை, கூட்டுறவு கடன் சங்கமாக தன்னார்வமாக மாற்றவும் மற்றும் வங்கி சாராத நிறுவனமாக அறிவிக்கவும் கோரி இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஷெர் நாகரிக் சககாரி வங்கி லிமிடெட், ஜபல்பூர் (மத்திய பிரதேசம்) ஒரு முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளது. வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 ன் 36A (2) பிரிவின் (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும்) படி வங்கி சட்டத்தின் வரம்புக்கு உட்பட்ட பகுதிக்கு விதிக்கப்பட்டுள்ளபடி, தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, பிப்ரவரி 08, 2018 தேதியிட்ட தனது உத்தரவில் ஷேர் நாகரிக் சஹகாரி வங்கி லிமிடெட், ஜபல்பூர் (மத்திய பிரதேசம்) உரிமத்தை ரத்து செய்து விட்டது என்று பொது மக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கிறது. அதன்படி, வங்கியியல் சட்டம் பிரிவு 5(cci) (உடன் பிரிவு 56ஐப் படிக்கவும்)-ன் கீழ், “கூட்டுறவு வங்கி”யாக செயல்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. வங்கியானது சட்டப்படி பிரிவு 22 (உடன் பிரிவு 56ஐப் படிக்கவும்)-ன்படி வங்கி வர்த்தகத்தை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின் பிரிவு 5 (b)-ல் குறிப்பிட்டபடி வங்கி வர்த்தகம் செய்வதிலிருந்து (டெபாசிட்டுகள் பெறுதல் திருப்பித் தருதல் உட்பட) உடனடியாகத் தடை செய்யப்படுகிறது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2195 |