விற்பனை முனையங்களில் பணம் எடுத்தல் – பணம் எடுக்க வரம்பு மற்றும் வாடிக்கையாளர் கட்டணங்கள் – தளர்த்தப்பட்டன - ஆர்பிஐ - Reserve Bank of India
விற்பனை முனையங்களில் பணம் எடுத்தல் – பணம் எடுக்க வரம்பு மற்றும் வாடிக்கையாளர் கட்டணங்கள் – தளர்த்தப்பட்டன
RBI/2016-2017/140 நவம்பர் 18, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் விற்பனை முனையங்களில் பணம் எடுத்தல் – பணம் எடுக்க பல்வேறு இடங்களில் உள்ள விற்பனை முனையங்களில் தினசரி ஒரு அட்டைக்குப் பணம் எடுக்க வரம்பு விதிக்கப்பட்ட, வங்கிகளால் வழங்கப்பட்ட, பணம் எடுக்கும் அட்டைகள் திறந்த ப்ரீபெய்டு அட்டைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பணம் எடுப்பது பற்றி ஜூலை 22, 2009 தேதியிட்ட DPSS CO PD No. 147/02.14.003/2009-10 சுற்றறிக்கை, செப்டம்பர் 05, 2013 தேதியிட்ட DPSS CO PD No. 563/02.14.003/2013-14 மற்றும் ஆகஸ்டு 27, 2015 தேதியிட்ட DPSS CO PD No. 449/02.14.003/2013-14 சுற்றறிக்கைகளைப் பார்க்கவும்.. 2. குறிப்பிட்ட வங்கிநோட்டுகள் (500 மற்றும்1000 ரூபாய்) செல்லாதென அறிவிக்கப்பட்டதையடுத்து இந்திய ரிசர்வ் வங்கி, நவம்பர் 14, 2016 தேதியிட்ட DPSS CO PD No. 1240/ 02.10.004/ 2016-2017 சுற்றறிக்கை மூலம், நவம்பர் 10, 2016 முதல் டிசம்பர் 30, 2016 வரை, வாடிக்கையாளர்கள் அனைத்து ATM களில் மேற்கொள்ளும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் மறு ஆய்வுக்குட்பட்டு கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.. 3. வாடிக்கையாளர்களை மையப்படுத்தும் மற்றுமோர் நடவடிக்கையாக, (i) அனைத்து இடங்களில் உள்ள (Tier I முதல் Tier VI வரை) விற்பனை முனையங்களில் இவ்வசதி உள்ள அனைத்து வர்த்தக மையங்களிலும் பணம் எடுப்பதற்கான வரம்பு ஒரே சீராக ஒரு நாளைக்கு ரூ. 2000/- என்று விதிக்கப்பட்டுள்ளது மற்றும் (ii) இவ்வகைப் பரிவர்த்தனைகளுக்கு ஏதேனும் வாடிக்கையாளர் கட்டணங்கள் இருப்பின், அவை பரிசீலனைக்குட்பட்டு விலக்கிக்கொள்ளப்படுகின்றன. 4. மேற்குறிப்பிட்ட விஷயம் குறித்த சுற்றறிக்கை மறுபரிசீலனைக்குட்பட்டு டிசம்பர் 30, 2016 வரை நீடிக்கும். 5. இது விஷயமான மற்றவழிமுறைகள் முன்னர் உள்ளதுபோலே தொடரும். 6. இந்த உத்தரவு கொடுப்பு மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் 2007 (Act 51 of 2007) (பிரிவு 10(2) உடன் பிரிவு 18-ஐயும் பார்க்கவும்) இன் கீழ்வெளியிடப்படுகிறது.. இங்ஙனம் (நந்தா S. தவே) |