குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன – திருமண விழாவை நடத்துவதற்கான பணம் எடுக்க உச்சவரம்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன – திருமண விழாவை நடத்துவதற்கான பணம் எடுக்க உச்சவரம்பு
அறிவிப்பு எண் 145 நவம்பர் 21, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நவம்பர் 08, 2016 தேதியிட்ட மேற்குறிப்பிட்ட விஷயங்குறித்த சுற்றறிக்கை DCM. (Plg) No. 1226/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். 2. பொதுமக்களில் சிலர் தங்கள் வாரிசுகளின் திருமண விழாவைக் கொண்டாட வசதியாக உச்ச வரம்பை நிர்ணயிக்க முடிவெடுக்கப்பட்டது. முடிந்தவரை காசோலைகள், வரைவோலைகள், கடன் / பற்று அட்டைகள், ஃப்ரீபெய்டு அட்டைகள், மொபைல் டிரான்ஸ்பர், இணையதள வங்கிச்சேவைகள், NEFT / RTGS போன்றவைகளில் ஈடுபடுமாறு வாடிக்கையாளர்களை வங்கிகள் ஊக்குவிக்கவேண்டும். ரொக்கம் தேவைப்படும் இடங்களில் மட்டுமே பணத்தை பயன்படுத்த அவர்கள் அறிவுறுத்தப்படவேண்டும். இவ்வாறு திருமணத்திறாக்கப் பணம் கணக்கிலிருந்து எடுப்பதற்குப் பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. i) வங்கிக்கணக்கில் நவம்பர் 08, 2016 அன்று வேலைநேரமுடிவில் இருப்பிலுள்ள தொகையிலிருந்து டிசம்பர் 30, 2016 வரை அதிகபட்சமாக ரூ. 2,50,000 வரை எடுக்க அனுமதி அளிக்கப்படும். ii) KYC நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குகளிலிருந்து மட்டும் பணம் எடுக்க அனுமதி அளிக்கப்படும். iii) திருமண தேதி டிசம்பர் 30, 20-16 அல்லது அதற்கு முன்பாக இருந்தால் மட்டுமே பணம் எடுக்க அனுமதி உண்டு. iv) திருமணத்திற்காக பெற்றோர் அல்லது திருமணம் புரிந்து கொள்ளும் நபரின் (யாராவது ஒருவரின் கணக்கிலிருந்து மட்டும்) கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படலாம். v) எடுக்கப்படும் பணம் சில்லரை செலவுகளுக்குப் பட்டுவாடா செய்யப்பயன்படுத்தப் படுவதால் எவருக்கு கொடுக்கிறார்களோ அந்த நபர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லையென்பது நிறுவப்படவேண்டும். vi) பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தோடு பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்படவேண்டும்.
3. வங்கிகள் தங்களிடம் கொடுக்கப்படும் இத்தகு சான்றாவணங்களின் பதிவுகளைப் பத்திரமாக வைத்திருந்து, தேவைப்படும் நேரத்தில் உரிய அதிகாரிகளிடம் சோதனையின் போது காட்டுவதற்கு தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். நம்பகத்தன்மை மற்றும் உண்மையான நபர்களுக்கான பயன்பாடு இவற்றை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் மறு ஆய்வு செய்யப்படும். இங்ஙனம் (P. விஜயகுமார்) இணைப்பு – மேலே குறிப்பட்டபடி |