500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – பணமாக எடுக்க வரம்புகள்
அறிவிப்பு எண் 142 நவம்பர் 21, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் 500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி மேற்குறிப்பிட்ட பொருள்குறித்த எங்களின் நவம்பர் 14, 2016 தேதியிட்ட DCM. (Plg) No. 1274/10.27.00/2016-17 சுற்றறிக்கையின் பத்தி 1 கூடுதல் வசதிகள் பிரிவில் கூறப்பட்டுள்ளபடி, நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் (கடந்த 3 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் செயல்பாட்டுடன் கூடிய கணக்குகளுக்குப் பொருந்தும்) ஒரு வாரத்திற்கு ரூ. 50,000 வீதம் நடப்புக் கணக்கிலிருந்து பணமாக எடுக்க அனுமதி உண்டு. மறு ஆய்வின் பேரில், இந்த வசதியை ஓவர் டிராப்ட் (இருப்புக்கு மேல் எடுக்கும் வசதியுடைய) கணக்குகள் மற்றும் காஷ் கிரெடிட் கணக்குகளுக்கும் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடப்புக் கணக்கு/ ஓவர் டிராப்ட்/ காஷ் கிரெடிட் கணக்கு வைத்திருப்பவர்கள் (கடந்த 3 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் செயல்பாட்டுடன் கூடிய கணக்குகளுக்குப் பொருந்தும்) அவற்றிலிருந்து வாரத்திற்கு ரூ. 50,000 வீதம் பணமாக எடுக்க அனுமதி உண்டு. தனிநபர் ஓவர் டிராப்ட் கணக்குகளுக்கு இந்த உயர்த்தப்பட்ட வாராந்திர வரம்பு பொருந்தாது. 2. இவ்வாறு எடுக்கப்படும் பணம் பெருமளவு உயர்மதிப்பிலக்க ரூ. 2,000 மதிப்பிலக்க நோட்டுகளாகக் கொடுக்கப்படும். இங்ஙனம் (சுமன் ரே) |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: