RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78509507

பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் அவர்களின் பெயர்களின் எதிராக "வங்கி" என்ற பெயரைப் பயன்படுத்துவது பற்றி எச்சரிக்கை

நவம்பர் 29, 2017

பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் அவர்களின் பெயர்களின் எதிராக "வங்கி" என்ற பெயரைப் பயன்படுத்துவது பற்றி எச்சரிக்கை

சில கூட்டுறவு சங்கங்கள் தங்கள் பெயர்களில் 'வங்கி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது. இது வங்கிக் கட்டுப்பாட்டுச் சட்டம், 1949 இன் பிரிவு 7 (அனைத்துக் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) (B.R. Act, 1949)-ன்படி சட்டமீறல் ஆகும்.

வங்கிக் கட்டுப்பாட்டுச் சட்டம், 1949-ன் விதிமுறைகளை மீறுவதன் மூலம் வங்கியை நடத்தும், வங்கியின் உறுப்பினர்கள் / பெயரளவிலான உறுப்பினர்கள் / இணை உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து சில கூட்டுறவு சங்கங்கள் வைப்புகளை ஏற்றுக்கொள்கின்றன என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது.

பொது உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படுவது, அத்தகைய கூட்டுறவு சங்கங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி, இத்தகைய உரிமமோ, அல்லது வங்கி வர்த்தகம் செய்வதற்கோ வங்கிக் கட்டுப்பாட்டுச் சட்டம், 1949-ன் விதிமுறைகளின்படி அதிகாரம் வழங்கப்படவில்லை. வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாதக் கூட்டுக் கழகத்தினரிடமிருந்து இந்த வங்கிகளில் செலுத்தப்படும் வைப்புகளுக்கு காப்பீடும் கொடுக்கப்படவில்லை. இந்தக் கூட்டுறவு வங்கிகளை அணுகும்போது, வங்கியைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு அணுகுமாறு பொது உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/1467

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?