ரைஸ் புல்லிங் மோசடி குறித்த எச்சரிக்கை ஆலோசனை - ஆர்பிஐ - Reserve Bank of India
ரைஸ் புல்லிங் மோசடி குறித்த எச்சரிக்கை ஆலோசனை
தேதி: ஜூலை 31, 2018 ரைஸ் புல்லிங் மோசடி குறித்த எச்சரிக்கை ஆலோசனை சில நேர்மையற்ற நபர்கள் தாமிரம் / இரிடியம் ஆகியவற்றால் ஆன “ரைஸ் புல்லர்” எனப்படும் அரிசிதானியத்தை ஈர்க்கும் மந்திர சக்தி கொண்டிருப்பதாகக் கூறப்பட்டு ஒரு சாதனத்தை விற்பனை செய்கிறார்கள் என்றும், என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அத்தகைய நடவடிக்கைகளுக்கு நிதி உதவி அளிக்கிறது என்பதற்கு ஆதாரமாக ரிசர்வ் வங்கி / இந்தியஅரசு வழங்கிய அரசாங்க பத்திர ஏல சுற்றறிக்கைகள் / அறிவிப்புகளை, இந்த பொருள்களின் விற்பனையாளர்கள் சார்பாக தொடர்புடைய நபர்கள் தவறாக சித்தரிப்பதாக கூறப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, பொது மக்களை இதுபோன்ற விளம்பரங்களுக்கு இரையாகிவிடக் கூடாது என்றும், இதுபோன்ற சம்பவங்களை விசாரணை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் பொதுவாக எச்சரிக்கிறது. இத்தகைய நேர்மையற்ற நபர்களுடன் தொடர்பு கொள்வது நேரடி நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் பொதுமக்கள் தங்கள் சொந்த நலனுக்காக இத்தகைய சலுகைகளை புறக்கணிக்குமாறு மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. அஜித் பிரசாத் செய்தி வெளியீடு: 2018-2019/270 |