ஆர்.டி.ஜி.எஸ். கால சாளரத்தில் மாற்றங்கள் - ஆர்பிஐ - Reserve Bank of India
ஆர்.டி.ஜி.எஸ். கால சாளரத்தில் மாற்றங்கள்
RBI/2015-16/168 செப்டம்பர் 01, 2015 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அம்மணி / ஐயா ஆர்.டி.ஜி.எஸ். கால சாளரத்தில் மாற்றங்கள் செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கி விடுமுறை என்பதற்கான ஆகஸ்ட் 28, 2015 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் பத்திரிகை வெளியீட்டு எண் 2015-2016/ 528-ன் மேல் கவனம் கோரப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, சனிக்கிழமைகளில் இயங்கும் வங்கிகளுக்கு ஆதரவு சேவைகளை அளிக்கிறது. 2. எனவே, ஆர்.டி.ஜி.எஸ். இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் இயக்கப்படமாட்டாது. எனினும் இயங்கும் சனிக்கிழமைகளில் முழு நாளாக இயங்கும். வருங்கால மதிப்பு தேதியிடப்பட்ட மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் நிகழும் பரிவர்த்தனைகள். ஆர்.டி.ஜி.எஸ்ஸின் கீழ் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. 3. செப்டம்பர் 1, 2015லிருந்து கீழ்க்கண்டவாறு ஆர்.டி.ஜி.எஸ். கால சாளரம்.
4. இந்த சுற்றறிக்கை கொடுப்பு மற்றும் தீர்வு முறைமைகள் சட்டம் பிரிவு 10 (2)-ன்கீழ் வெளியிடப்பட்டுள்ளது. 5. தயவு செய்து இதைப் பெற்றமைக்கு ஒப்புதல் அளிக்கவும். தங்கள் உண்மையுள்ள நீலிமா ராம்டெக் |