காசோலை போடும் பெட்டி/பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சி - ஆர்பிஐ - Reserve Bank of India
காசோலை போடும் பெட்டி/பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சி
RBI/2006-2007/214
DBOD.No.Leg.BC.49/09.07.005/2006-07
டிசம்பர் 18, 2006
பிராந் திய கிராம வங்கிகள் நீங்கலாக
அட்டவணையிலுள்ள அணைத்து வங்கிகளுக்கும்
அன்புடையீர்
காசோலை போடும் பெட்டி/பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சி
2004 ஏப்ரல் 10 தேதியிட்ட எங்கள் DBOD.No.Leg.BC.74/09.07.005 இல் காசோலை போடும் பெட்டியும், காசோலையைப் பரிவர்த்தனைக்காக (கிளையில்) ஏற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி கொடுக்கும் வசதியும் ஆக இரண்டுமே ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் இருக்கவேண்டும் என்றும், எக்காரணத்திற்காகவும் காசோலைகளை ஏற்றுக் கொள்ளாமலிருத்தல் கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தோம்.
2. ரிசர்வ் வங்கியும், வங்கிக் குறை தீர்ப்பாளரும் அநேக வங்கிக் கிளைகள் காசோலைகளை வாடிக்கையாளரிடமிருந்து ஏற்றுக் கொள்ளாமல், பெட்டியிலே போடுமாறு வற்புறுத்துவதாகவும் புகார்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெறுகின்றனர். எனவே வங்கிகள் மேற்படி சுற்றறிக்கையின் விபரங்களை அமல்படுத்தி, வாடிக்கையாளரை பெட்டியில் தான் போட வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
3. பெட்டியிலே போடும் வசதியும், முகப்பிலே நேரில் கொடுக்கும் வசதியும் இரண்டுமே நடைமுறையில் இருக்கும் பிபரத்தை வாடிக்கையாளர் அறிந்து கொள்ளும் வண்ணம், “வாடிக்கையாளர்கள் காசோலைகளை உரிய செலுத்தும் படிவங்களுடன் முகப்பிலே கொடுத்து உரிய அத்தட்சியைப் பெற்றுக் கொள்ளலாம்” என்று காசோலை போடும் பெட்டியின் மேலேயே எழுதிட வேண்டும். ஆங்கிலம், இந்தி, வட்டார மொழி என மும்மொழிகளிலும் இந்த அறிவிப்பினை எழுதிடல் வேண்டும்.
கிடைத்தமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
நம்பிக்கையுள்ள
பிரசாந்த் சரண்
தலைமைப் பொது மேலாளர் பொறுப்பு