காசோலைகள் போடும் பெட்டி/காசோலை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி பெறும் வசதி - ஆர்பிஐ - Reserve Bank of India
காசோலைகள் போடும் பெட்டி/காசோலை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி பெறும் வசதி
RBI/2006-07/220
RPCD.CO.RRB.BC.No.39/03.05.33(E)/2006-07 டிசம்பர் 26, 2006
அனைத்து பிராந்தியக் கிராம வங்கிகளுக்கும்,
அன்புடையீர்,
காசோலைகள் போடும் பெட்டி/காசோலை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி பெறும் வசதி
பெரும்பாலான வங்கிக்கிளைகள் முகப்பிடங்களில் காசோலைகளை வாங்கிக் கொள்ளாமல் காசோலைகளை பெட்டி போடும்படி வாடிக்கையாளர்களை வற்புறுத்துவதாக புகார்கள் ரிசர்வ் வங்கிக்கும் /வங்கிகள் குறைதீர்ப்பு மையத்திற்கும் வருகின்றன.
2. இத்தகைய தருணங்களில் காசோலைகளை பெட்டியிலே போட வேண்டுமென்று வாடிக்கையாளர்கள் வற்புறுத்தப்படவேண்டாம் என்று வங்கிகளை வேண்டிக்கொள்கிறோம். “காசோலைபோடும் பெட்டி” வசதியைச் செய்து தந்தபோதிலும் வழக்கமாகக் காசோலை பெற்றுக் கொண்டு அத்தாட்சி அளிக்கும் வசதியை வாடிக்கையாளருக்கு மறுக்க வேண்டாம். வாடிக்கையாளர் முகப்பிடங்களில் பரிவர்த்தனைக்காக அளிக்கும் காசோலைகளுக்கு பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி அளிக்க எந்த வங்கிகிளையும் மறுக்கக்கூடாது.
3. எங்கெல்லாம் “காசோலை போடும் பெட்டி” வசதி உள்ளதோ வாடிக்கையாளருக்கு இருவித வசதிகள் உள்ளதை (அதாவது பெட்டியில் போடலாம் அல்லது முகப்பிடத்தில் தரலாம்) வாடிக்கையாளருக்கு அறிவிப்பது அவசியம், இதனால் தகவலறிந்து தக்க முடிவினை வாடிக்கையாளர் எடுக்கலாம். ஆகவே காசோலைபோடும் பெட்டியின் மீதே கீழ்க்கண்டவாறு கட்டாயமாக அறிவிக்க வங்கிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
“வாடிக்கையாளர்கள் காசோலைகளை முகப்பிடங்களில் கொடுத்து காசோலை செலுத்தும் சீட்டில் அத்தாட்சியைப் பெற்றுக் கொள்ளலாம்”
மேற்கண்ட செய்தியை ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிராந்திய மொழியில் அறிவிக்கலாம்.
4. பெற்றமைக்கான ஒப்புதலை உரிய பிராந்திய அலுவலகத்திற்கு அனுப்புவும்.
தங்கள் உண்மையுள்ள
G. ஸ்ரீனிவாசன்
தலைமைப் பொது மேலாளர் (பொறுப்பு)