குடியிருப்பு வீடுகள் மீதான அடமானக் கடன்கள் - இடர்வரவு மதிப்பீட்டு வரையறைகளில் மாற்றம் - ஆர்பிஐ - Reserve Bank of India
குடியிருப்பு வீடுகள் மீதான அடமானக் கடன்கள் - இடர்வரவு மதிப்பீட்டு வரையறைகளில் மாற்றம்
RBI/2007-08/320 மே 14, 2008 அனைத்து வணிக வங்கிகளின் அன்புடையீர் குடியிருப்பு வீடுகள் மீதான அடமானக் கடன்கள் - 'போதுமான மூலதனம் குறித்த அமைப்பை அமலாக்கம் செய்வதற்குரிய வழிகாட்டுதல்கள்' குறித்த ஏப்ரல் 27, 2007 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.DBOD.No.BP.BC.90/20.06.001/2006-07-ல் உள்ள பத்தி 5.10-வைப் பார்க்கவும். இவற்றோடு 'போதுமான மூலதனத்திற்கான விவேக நடைமுறைகள்' குறித்த தொகுப்புச் சுற்றறிக்கையின் (ஜூலை 2, 2007 தேதியிட்ட கடித எண் DBOD.No.BP.BC.4/21.01.002/2007-08 மூலம் வெளியிடப்பட்ட) பிற்சேர்க்கை 8-ல் எண்கள் [(A)(III)(13&14)] கீழ் உள்ள குடியிருப்பு வீடுகள் மீதான அடமானக் கடன்கள் குறித்த விஷயங்களைப் பார்க்கவும். 2. இது தொடர்பாக 2008-09 ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கொள்கை அறிவிப்பின் பத்தி 169ஐப் (பத்தியின் நகல் இணைக்கப்பட்டுள்ளது) பார்வையிடுமாறு வேண்டுகிறோம். அதில் குறிப்பிட்டுள்ளபடி பேசல் -1 & பேசல் 11 சட்ட அமைப்பின் கீழ் நடப்பிலுள்ள வழிகாட்டுதல்களில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
3. மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் பாசல்-II & பாசல்-I அமைப்பின் கீழ் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஆகவே பாசல்-I சட்ட அமைப்பின் கீழ் உள்ள வங்கிகளும் ஏப்ரல் 27, 2007 தேதியிட்ட சுற்றறிக்கையின் பத்தி 5.10ல் குறிப்பிட்டுள்ளபடி இடர்வரவு மதிப்பீடுகளை கடன்/மதிப்பு விகிதத்தின் அடிப்படையில் கணக்கிட்டு செயல்பட வேண்டும். தங்கள் உண்மையுள்ள பிற்சேர்க்கை 2008-09ஆம் ஆண்டிற்கான ஆண்டுக் கொள்கை அறிவிப்பில் பத்தி எண் 169 (d) வீட்டுவசதிக் கடன்கள் குறித்த விவேக நடைமுறைகள் 169. போதிய மூலதனத்தை கணக்கிடும் நோக்கத்திற்காக (Capital Adequacy Purpose), இடர்வரவு மதிப்பீடுகளை (Risk Weights) உபயோகப்படுத்தும்பொழுது, வீட்டுவசதி கடன்களைப் பொறுத்தவரை சமீபகால முன்னேற்றங்களைக் சீர்தூக்கிப் பார்த்ததில் இதற்கான உச்சவரம்பை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப இத்தகு கடன்கள் மீதான இடர்வரவு மதிப்பீடு 50% ஆக இருக்கும். |