RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78441823

சுத்த நோட்டுக்கொள்கை - நோட்டுக் கட்டுகளில் ‘பின்’ அடித்தல்

RBI/2006-2007/241

RPCD.CO.RF.BC.No.43/07.38.03/2006-07                                               ஜனவரி 31, 2007

 

அனைத்து மாநில/மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கிகள்

அன்புடையீர்,

சுத்த நோட்டுக்கொள்கை -

நோட்டுக் கட்டுகளில் ‘பின்’ அடித்தல்

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களையும் மீறி வங்கிகள் இன்னமும் ரூபாய் நோட்டுக்கட்டுகளில் பின் அடிக்கும் பழக்கத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதாக அறிகிறோம்.  இப்பழக்கம் நோட்டுகளைச் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நோட்டுகளின் ஆயுட்காலத்தையும் குறைக்கும், வாடிக்கையாளர்களுக்கு அவ்வளவு எளிதாக நோட்டுக் கட்டைப் பிரிக்க முடியாத இன்னலையும் கொடுக்கும்.

 

2. மீண்டும் புழக்கத்திற்கு விடக்கூடிய, விடமுடியாத நோட்டுகள் என்று வங்கிகள் நோட்டுகளைப் பிரிப்பதில்லை. அழுக்கடைந்த நோட்டுகளை மக்களுக்கு வழங்குகின்றனர்.  மேலும் வங்கிகள் நோட்டில் வெள்ளை நிறத்திலிருக்கும், நீர்க்குறியீட்டில் எண்ணிக்கையின் அளவு எண்களை எழுதும் பழக்கத்தையும் கடைப்பிடிக்கின்றனர்.  இது நீர்க்குறியீட்டினுள் அமைந்திருக்கும் படத்தின் உருவத்தை எளிதாகப்பார்ப்பதற்கு முடியாமல், நீர்க்குறியீட்டைச் சிதைக்கிறது.

3. எனவே கீழ்க்கண்ட முடிவுகள் உடனே அமல் செய்யப்பட வேண்டும்.

                அ) எந்த ஒரு நோட்டுக் கட்டின் மேலும் பின் அடிப்பதை வங்கிகள் விட்டொழிக்க வேண்டும். அதற்குப்பதிலாக காகித வளையல்களைக் கொண்டு நோட்டுக்கட்டை இறுக்க வேண்டும்.

                ஆ) வங்கிகள் நோட்டுகளை மீண்டும் புழக்கத்திற்கு விடக்கூடியவை, விடமுடியாதவை என்று பிரித்து, சுத்தமான நோட்டுகளையே மக்களுக்கு வழங்க வேண்டும்.  பணப்பெட்டக அறைகள் கொண்ட வங்கிகள் மூலம் அழுக்கடைந்த நோட்டுகளைப் பின் அடிக்காத நிலையிலேயே ரிசர்வ் வங்கிக்கு அனுப்ப வேண்டும்.

                இ) நோட்டுகளில் வெள்ளை நிறத்திலுள்ள நீர்க்குறியீட்டுப் பகுதிமேல் எழுதும் பழக்கத்தை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

 

4. எங்களது ஆணை RPCD.CO.RF.Dir.No.44/07.38.03/2006-07 தேதி ஜனவரி 31, 2007 இத்துடன்  இணைக்கப்பட்டுள்ளது.

5. கிடைத்தமைக்கு சம்பந்தப்பட்ட வட்டார அலுவலகத்திற்கு ஒப்புதல் அளிக்கவும். 

அன்புடன்

 

C.S. மூர்த்தி

தலைமைப் பொது மேலாளர் பொறுப்பு

 

சுத்தமான நோட்டுக் கொள்கை

நோட்டுக் கட்டுகளில் ‘பின்’ அடித்தல்

 

1949ஆம் வருடத்திய வங்கிகள் ஒழுங்கு முறைச்சட்டம் பிரிவு 35A மற்றும் 56இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலன் கருதி, கீழே குறிப்பிட்டுள்ள ஆணைகளை உடனடி அமலுக்காகப் பிறப்பிக்கிறது.

1.        புதிய/மீண்டும் புழக்கத்தில் விடக்கூடிய/விடமுடியாத நோட்டுக் கட்டுகளின் மேல் பின் அடிப்பதை வங்கிகள் அறவே விட்டுவிடவேண்டும், மாறாக நோட்டுக் கட்டுகளைக் காகித வளையங்களில் நன்கு இறுக்கிக் கட்ட வேண்டும்.

 

2.        வங்கிகள், நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விடக்கூடிய அல்லது விடமுடியாதவை என்று பிரித்து சுத்தமான நோட்டுகளையே பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.  பணப்பெட்டக அறைகள் கொண்ட வங்கிக் கிளைகள் அழுக்கடைந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பும் போது, அவை பின் அடிக்கப்படாமல் இருத்தல் அவசியம்.

2.

3.        நோட்டின் மேல் உள்ள வெள்ளை நிற நீர்க்குறியீட்டின் மேல் எழுதுவதை வங்கிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

 

 

 

( V.S. தாஸ் )

 நிர்வாக இயக்குநர்

 

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?