RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78439361

அக்கவுண்ட் பேயீ காசோலைகளை வரவுவைத்தல் மூன்றாம் நபரின் கணக்கில் காசோலையை வரவு வைக்கத் தடை

 

பத்திரிக்கை குறிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி

பத்திரிக்கை தொடர்பு அலுவலகம், மத்திய அலுவலகம்,

தபால் பெட்டி எண் 406, மும்பை – 400 001

தொலை பேசி : 22660502 – பாக்ஸ் :22660358, 22703279

 

ஜனவரி 23, 2006

அக்கவுண்ட் பேயீ காசோலைகளை வரவுவைத்தல்

மூன்றாம் நபரின்  கணக்கில் காசோலையை வரவு

வைக்கத் தடை

பங்குகள் தொடர்பான துவக்கப்பொது வெளியீட்டில் (IPO) சமீப காலங்களில் சில தனிநபர்களும் நிறுவனங்களும் செய்த முறைகேடுகள் பற்றி இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்தது.  இதைத்தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி முறைகேடுகள் நடத்தப்படும் வழிமுறைகள் பற்றி தீவிரமாக விசாரணை நடத்தியது.  ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த குறிப்புகளுக்கு மாறாக, வங்கிகள் அக்கவுன்ட் பேயீ காசோலையை (திருப்பித் தரப்படும் பணம்) தரகர்களில் கணக்குல் சேர்த்து விடுகின்றன; காசோலையில் குறிப்பிடப்படும் கணக்கில் சேர்ப்பதில்லை என்பது தெரிய வந்தது.  இது அமைப்பைச்சீர்கேடாக்கி, முறைகேடுகளுக்கு வழி வகுத்துள்ளது. அக்கவுன்ட் பேயீ காசோலைகளுக்கான நடைமுறைகளை செயல்படுத்துவதில் இருந்து வங்கிகள் வழிதவறியதால்தான்  இந்த முறைகேடுகள் சாத்தியமாகியுள்ளன.  வங்கிகளை பலதரப்பட்ட ஆபத்துகளுக்கு உட்படுத்துவதால் இது அறிவார்ந்த வணிக நடைமுறையாக இருக்க முடியாது.

 

காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ளவரின்  கணக்கு தவிர மற்ற கணக்குகளில் அக்கவுன்ட் பேயீ காசோலைகளை வரவுவைப்பதைத் தடை செய்வது அவசியம் என ரிசர்வ் வங்கி கருதுகிறது.  அக்கவுன்ட் பேயீ காசோலைகளை மற்றவர் கணக்கில் வரவு வைக்கக்கூடாதென ரிசர்வ் வங்கி வங்கிகளிடம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பான  சுற்றறிக்கை ரிசர்வ் வங்கியின் இளைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  (www.rbi.org.in.)

 

 

பி.வி. சதானந்தன்

மேலாளர்

 

பத்திரிக்கைக் குறிப்பு : 2005-2006/928

 

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?