RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78450259

வங்கிகள் விதிக்கும் அதிகப்படியான வட்டி பற்றிய புகார்கள்

RBI/2006-07/377

 

DBOD.No.Dir.BC.93/13.03.00/2006-07

மே7, 2007

 

 

அட்டவணையிலுள்ள அனைத்து வணிக வங்கிகள்

(பிராந்தியக் கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)

 

 

அன்புடையீர்,

 

வங்கிகள் விதிக்கும் அதிகப்படியான வட்டி பற்றிய புகார்கள்

2007-08ஆம் ஆண்டிற்கான ஆண்டுக் கொள்கை அறிக்கை பத்தி 168ஐப் பார்க்கவும். (இணைக்கப்பட்டுள்ளது)

 

2. சில கடன்கள் மீது அதிகப்படியான வட்டி விதிப்பதாக புகார்களை ரிசர்வ் வங்கியும் வங்கிக்குறை தீர்ப்பாளரும் பெறுகின்றனர்.  கடன்கள் மீது இயக்குநர் குழுவின் ஒப்புதலைப் பெற்ற தெளிவான நோக்கத்தையும் கொள்கையையும் உடைய வட்டிக்கொள்கையை வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டுமென்று 2006 ஜூலை 1ஆம் தேதியிட்ட எங்கள் மூலச்சுற்றறிக்கை DBOD. No. Dir. BC. 5/13.03.00/ 2006-07ஐப் பார்க்கவும்.  சிறு, குறு விவசாயிக்களுக்கான குறுகிய கால கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி, அசலைவிட கூடுதலாக இருக்கக்கூடாது என்பதனை வங்கிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.  (மேலே குறிப்பிடப்பட்ட மூலச் சுற்றறிக்கையின் பத்தி 10.2).

3.  வட்டி விகிதங்கள் விதிப்பது என்பது ஒழுங்கு முறைகளுக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக்கப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வட்டி விதிப்பது என்பது கடுவட்டி(usurious) பெறுதலையும், நீடித்து நிலைத்து நிற்காமையையும், சாதாரண வங்கி பழக்கவழக்கத்திற்கு மாறுபட்டதாகவுமே கருதப்படும்.

4. கடன் மனுக்கள் பரிசீலனைக் கட்டணங்கள் உட்பட கடன்கள் மீதான வட்டி விதித்தல் சம்பந்தமாக பொருத்தமான உள்ளக கொள்கைகளை உருவாக்கி கடுவட்டி விதித்தலைத் தவிர்க்க வேண்டும்.  சிறு கடன்கள், தனி நபர் கடன்கள்  போன்ற குறைந்த மதிப்புள்ள கடன்களுக்கான வட்டி விகிதத்தை விதிக்கும் கொள்கைகளை உருவாக்கும்போது வங்கிகள் கீழே கண்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

v       பொருத்தமான முன் அனுமதி வழிமுறை இக்கடன்களில் பின்பற்றப் படவேண்டும்.  கடன் வாங்கவிருப்பவற்குரிய ரொக்க வரவுகளையும் பிற இதர நடவடிக்கைகளோடு கணக்கிட வேண்டும்.

v

v       கடனாளியின் உள்ளகத் தரநிர்ணய அளவைப் பொறுத்து, நியாயமான இடர்வரவை மதிப்பீடு செய்து வட்டி விகிதங்கள் அவைகளை உள்ளடக்கி இருக்கவேண்டும்.  இடர்வரவைக் கணக்கிடும் போது பிணைப்பொருள் இருக்கிறதா இல்லையா என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

v

v       கடனாளிக்காகும் கட்டணம், வட்டி போன்ற மொத்த கடன் செலவு கணக்கிடப்பட்டு, வங்கி வழங்கும் கடனுக்கு நியாயமானதாக அது இருக்கவேண்டும்.  அத்தகைய நடவடிக்கையிலிருந்து வங்கிக்கு கிடைக்கும் தொகையையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

v

v       பொருத்தமான ஒரு உச்ச வரம்பை கட்டணம் உட்பட வட்டிக்கு விதித்து அதை நன்கு விளம்பரப்படுத்த வேண்டும்.

 

5.  இச்சுற்றறிக்கைத் தேதியிலிருந்து மூன்று மாதகால அளவிற்குள் இது சம்பந்தமான கொள்கையையும் செயல் முறையையும் வங்கிகள் அறிவிக்க வேண்டும்.

 

6. கிடைத்தமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

 

 

நம்பிக்கையுள்ள

 

 

P. விஜய பாஸ்கர்

தலைமைப் பொது மேலாளர்

 

 

எடுக்கப்பட்ட பகுதி

2007-08 ஆண்டிற்கான ஆண்டுக்கொள்கை அறிக்கை

 

 

வங்கிகள் விதிக்கும் அதிகப்படியான வட்டி பற்றிய புகார்கள்

 

 

 

168. சில கடன்கள் மீது அதிகப்படியான வட்டியும் கட்டணங்களும் வங்கிகள் விதிப்பதாக புகார்கள் ரிசர்வ் வங்கிக்கும் வங்கிக்குறை தீர்ப்பாளருக்கும் வருகின்றன.  வட்டி விகிதங்கள் விதிப்பது என்பது ஒழுங்கு முறைகளுக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக்கப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வட்டி விதிப்பது என்பது கடுவட்டி (usurious) பெறுதலையும், நீடித்து நிலைத்து நிற்காமையையும், சாதாரண வங்கி பழக்கவழக்கத்திற்கு மாறுபட்டதாகவுமே கருதப்படும்.

 

 

Ø       கடன் மனுக்கள் பரிசீலனைக் கட்டணங்கள் உட்பட கடன்கள் மீதான வட்டி விதித்தல் சம்பந்தமாக பொருத்தமான உள்ளக கொள்கைகளை உருவாக்கிட வேண்டுமென்று இயக்குநர் குழுக்கள் அறிவுறுத்தப் படுகின்றன.

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?