மகாத்மா காந்தி (புதிய) வரிசை நோட்டுகளை வழங்குவதற்கு ஏதுவாக புதிய செயல்படை அமைத்தல் – கணிப்புக்கூறுகள் மாற்றப்பட்டு செயல்படும் (ஏடிஎம்-கள்) தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் - ஆர்பிஐ - Reserve Bank of India
மகாத்மா காந்தி (புதிய) வரிசை நோட்டுகளை வழங்குவதற்கு ஏதுவாக புதிய செயல்படை அமைத்தல் – கணிப்புக்கூறுகள் மாற்றப்பட்டு செயல்படும் (ஏடிஎம்-கள்) தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள்
நவம்பர் 14, 2016 மகாத்மா காந்தி (புதிய) வரிசை நோட்டுகளை வழங்குவதற்கு ஏதுவாக புதிய மகாத்மா காந்தி (புதிய) வரிசை வங்கி நோட்டுகள் புதிய வடிவமைப்பிலுள்ள உயர்மதிப்பிலக்க (ரூ. 2000 நோட்டுகள் உட்பட) வெளியிடப்படுவதற்கான அறிவிப்புகளைத் தொடர்ந்து (ஏடிஎம்-கள்) தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் / பணம் வழங்கும் எந்திரங்கள் அனைத்தும் திருத்தியமைக்கப்பட்ட கணிப்புக்கூறுகளுடன் செயல்படவேண்டியது அவசியமாகிவிட்டது. 2. பொதுமக்களின் பணத்தேவையைப் பூர்த்திசெய்வதில் ஏடிஎம்-கள் பெரும்பங்காற்றி வருகின்றன. ஏடிஎம்-கள் திருத்தியமைக்கப்படுவதால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுக்குச் சௌகரியமான நோரங்களில் தேவைப்படும் இடங்களில் பணத்தை உயர்மதிப்பிலக்கம் மற்றும் சிறிய மதிப்பிலக்க நோட்டுகளை சரியானபடி கலந்து பெற முடியும். 3. ஏடிஎம்-கள் திருத்தியமைக்கும் பணியில் பல்வகை அமைப்புகள் ஈடுபட நேரிடுகிறது. வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் எந்திர தயாரிப்பாளர்கள், நேஷனல் பேமன்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) ஸ்விட்ச் செயல்பாட்டாளர்கள் – இவர்கள் அனைவரும் பெருமளவில் ஒருங்கிணைந்து பல்வேறு சிக்கலான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்திட வேண்டும். 4. இதுகுறித்து வழிகாட்டுதல் அளித்து உதவிட, ஒரு செயல்படையை இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திரு.S.S.முந்த்ராவின் தலைமையில் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த செயல்படையின் அங்கத்தினர்களாக பின்வருபவர்கள் அமைந்திடுவர்.
5. செயல்படையின் கூட்ட நடவடிக்கை மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக தானியங்கி பணம் வழங்கும் எந்திரத் தயாரிப்பாளர்கள், சேவையை மேலாண்மை செய்து அளிக்கும் நிறுவனம், பண இடைவழிப் பயணக் குழுமங்கள், வெள்ளை வில்லை ATM இயக்குவோர் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள். தேவைப்படுமானால் வேறு எவரையும் செயல்படை அழைக்கலாம். 6. செயல்படையின் நோக்கம் பின்வருமாறு –
7. மைய அலுவலகத்தின் கொடுப்பு மற்றும் பட்டுவாடாத்துறை (DPSS) செயலாளர் ரீதியான சேவை அதரவுகளை அளித்தடும். (அல்பனா கில்லவாலா பத்திரிக்கை வெளியீடு - 2016-2017/1197 |