Currency Distribution & Exchange Scheme (CDES) for bank branches based on performance in rendering customer service to the members of public - ஆர்பிஐ - Reserve Bank of India
Currency Distribution & Exchange Scheme (CDES) for bank branches based on performance in rendering customer service to the members of public
RBI/2015-16/393 மே 05, 2016 தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் / அம்மையீர் / ஐயா பொதுமக்களுக்கு வாடிக்கையாளர் சேவை அளிப்பதில் வங்கிக் கிளைகளின்செயல்திறன் சார்ந்த “ரூபாய் நோட்டுகள் விநியோகம் மற்றும் பரிமாற்றம் செய்யும் திட்டம்“ (Currency Distribution & Exchange Scheme – CDES) “ஊக்குவிக்கும் சலுகைகள் மற்றும் அபராதங்கள் திட்டம் – சீராய்வு “ குறித்த மே 21, 2015 தேதியிட்ட சுற்றறிக்கை எண் DCM (CC) No.4846/03.41.01/2014-15-ஐப் பார்க்கவும். 2. மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, ‘ஊக்குவிக்கும் சலுகைகள் மற்றும் அபராதங்கள்’ திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்டது. அதன்படி, ஊக்குவிப்பு சலுகைகளைத் தனியாகப் பிரிப்பதெனவும், சில ஊக்குவிப்புகளை மாற்றி அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மாற்றப்பட்ட ஊக்குவிப்பு சலுகைகளை உள்ளடக்கிய “ரூபாய் நோட்டுகள் விநியோகம் மற்றும் பரிமாற்றம் செய்யும் திட்டம்“ (CDES) இணைப்பில் கண்டுள்ளபடி, தேவையான நடவடிக்கைக்கு அனுப்பப்படுகிறது. மேற்குறிப்பிட்டபடி செயல்திறன் சார்ந்த ஊக்குவிப்பு சலுகைகள் ஜூலை 01, 2015 முதல் தொடர்ந்து வழங்கப்படும். எனினும், இயந்திரங்கள் நிறுவுதலுக்கு உரிய சலுகைகள் Cash Recyclers மற்றும் குறைந்த மதிப்புள்ள நோட்டுகளை வழங்கும் ATMs-களுக்கு மட்டுமே அளிக்கப்படும்.. ஊக்குவிப்புத்தொகை, ஒவ்வொரு இயந்திரத்தின் விலையைத் திருப்பித்தருதல் சார்ந்த உச்சவரம்பிற்கேற்ப, சுற்ற்றிக்கைத் தேதியிலிருந்து அமலாக்கம் செய்யப்பட்டு வழங்கப்படும். 3. அபராதங்கள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அது வெளியாகும் வரை. ஊக்குவிக்கும் சலுகைகள் மற்றும் அபராதங்கள் குறித்த திட்டங்கள் கீழ், குற்றங்களுக்கு அபராதங்கள் வழங்குதல் ஜூலை 01, 2014 தேதியிட்ட தொகுப்புச் சுற்றறிக்கை எண் G-5/03.39.01/2014-15-ன்படி நடைமுறைப்படுத்தப்படும்.. 4. இந்தச் சுற்றறிக்கையை எமது இணையதளமான www.rbi.org.in -ல் காணலாம். இங்ஙனம் (P. விஜய குமார்) இணைப்பு – மேலே குறிப்பிட்டபடி பொதுமக்களுக்கு வாடிக்கையாளர் சேவை அளிப்பதில் வங்கிக் கிளைகளின் செயல்திறன் சார்ந்த “ரூபாய் நோட்டுகள் விநியோகம் மற்றும் பரிமாற்றம் செய்யும் திட்டம்“ (Currency Distribution & Exchange Scheme – CDES) மீதான சுற்ற்றிக்கை 1. சுத்த நோட்டுகள் கொள்கையின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு நோட்டுகள் மற்றும் நாணயங்களை மாற்றுவதில் சிறந்த வாடிக்கையாளர் சேவையை கரன்ஸி செஸ்ட் உள்ளிட்ட வங்கிக் கிளைகள் அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு ““ரூபாய் நோட்டுகள் விநியோகம் மற்றும் பரிமாற்றம் செய்யும் திட்டம்“,ஏற்படுத்தப்பட்டது. 2. ஊக்குவிப்புகள் இந்தத் திட்டத்தின்படி, வங்கிகள் ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் பரிமாற்றம் செய்வதற்குக் கீழ்க்கண்ட ஊக்கத்தொகைகள் அவைகளுக்கு அளிக்கப்படும்.
3. ஊக்கத்தொகை பெறுவதற்கு செயல்முறை வழிகாட்டிகள் 3.1. செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை i. ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறையில் பெறப்படும் அழுக்கு நோட்டுகளுக்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். வங்கிகள் இதனைத் தனியாகக் கோர வேண்டியதில்லை. கரன்சி செஸ்ட் கிளை ஊக்கத்தொகையைத் தொடர்புடைய கிளைகளுக்கு, அவை வழங்கும் அழுக்கு நோட்டுகளுக்கு ஏற்ப பிரித்து வழங்கும். ii. இதேபோல் கிழிந்த நோட்டுகள் ரெமிட்டன்ஸுடன் பெறப்படுவதற்கு ஏற்ப / அல்லது தனியாக ரிஜிஸ்ட்ர்டு / இன்சூர்டு போஸ்ட்டில், சீல்டு கவரில் ரிசர்வ் வங்கிக்கு அனுப்புவதற்கு ஏற்ப, ஊக்கத்தொகை வழங்கப்படும். வங்கிகள் தனியாகக் கோரவேண்டாம். 3.2. இயந்திரங்களை அமைப்பதற்கான ஊக்கத்தொகை (i) ஒவ்வொரு வருடமும் ஜூலை 01 முதல் ஜுன் 30 வரை பல்வேறு இயந்திரங்களை வாங்க முடிவுசெய்யும் வங்கிகள் அவற்றின் விரிவான விவரங்களையும் விலையையும் ஆண்டுத் திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15-க்குள் ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறைக்கு தொடர்ந்து அனுப்பவேண்டும். வழங்கல் துறை, திட்டம் கிடைத்தவுடன் அதற்கு உரிய அங்கீகரிக்கப்பட்ட அதிகமான ஊக்கத் தொகையை வங்கிகளுக்கு அறிவுறுத்தும். ஒரு தனி ஏற்பாடாக, ஜூலை 01, 2016 முதல் ஜுன் 30, 2017 வரையான வரும் வருடத்திற்கு உரிய திட்டங்கள் மே 31, 2016-க்கு சமர்ப்பிக்கப்படலாம். ஜூலை 01, 2015 முதல் ஜுன் 30, 2016 வரை நடப்பு ஆண்டிற்குரிய இயந்திரங்கள் வாங்குவதற்கான தங்கள் திட்டங்களை, வங்கிகள் ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறைக்கு மே 31, 2016-க்குள் தனியாக அனுப்பவேண்டும். (ii) பணம் ஏற்கும்/ அளிக்கும் இயந்திரங்கள் / குறைந்த மதிப்பிலான நோட்டுகளை வழங்கும் ATM-கள் இவற்றை நிறுவுவதற்கான திட்டங்கள் அந்தந்த பகுதியில் இருக்கும் ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறைக்கு அந்த காலாண்டு முடிந்த 30 நாட்களுக்குள், வங்கியின் லிங்க் அலுவலகம் மூலம் அனுப்பவேண்டும். இயந்திர விற்பனையாளருக்கு முழுத் தொகையும் வழங்கப்பட்ட பின்பே, கோரப்பட்ட ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கவேண்டும். |