நடப்புக் கணக்குப் பரிமாற்றம் மேலும் தாராளமாக்கப்பட்டது - ஆர்பிஐ - Reserve Bank of India
நடப்புக் கணக்குப் பரிமாற்றம் மேலும் தாராளமாக்கப்பட்டது
பத்திரிக்கைக் குறிப்பு
|
|
பத்திரிக்கைத்தொடர்பு அலுவலகம்,
மத்திய அலுவலகம், தபால் பெட்டி எண் 406,
மும்பை – 400 001. |
e-mail: helpprd@rbi.org.in |
பிப்ரவரி 24, 2004
நடப்புக் கணக்குப் பரிமாற்றம் மேலும் தாராளமாக்கப்பட்டது
நடப்புக் கணக்குப் பரிமாற்றங்களை எளிமைப்படுத்துதல் மற்றும் தாராளமாக்கல் எனும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி அதன் அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு அந்நியச் செலாவனி மேலாண்மைச் சட்டப்படி கீழ்கண்ட அம்சங்களில் பணம் செலுத்துவதற்கு உரிமை அளிக்கும் முடிவை அறிவித்துள்ளது.
·
கவின களைஞர் பணம் செலுத்தல், எ.கா. மற்போர்வீரர்கள், நடனமாடுவோர், பொது நாடக நடிகர்கள்
·
·
குடியிருப்பு மனைகள் விற்பனைக்காக அமெரிக்க டாலர் 25000 அல்லது 5 விழுக்காடு தொகை இவற்றுள் எது அதிகமோ அதனை உட்புறச் செலுத்தலாக
·
கடல் கடந்த இந்திய அலுவலகங்களுக்கு குறுகிய காலக் கடன் ஏற்பது
·
ஏற்றுமதி வருவாய் ரூ 10 இலட்சத்திற்குக் குறைவாக இருக்கும் நிலையில் வெளிநாட்டுத் தொலைக் காட்சி விளம்பரத்திற்குப் பணம் செலுத்துதல்
·
·
இந்திய ரிசர்வ் வங்கியில் ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்படாத நிலையில், ஆனால் பண வழங்கல், FEMA (நடப்புக் கணக்குப் பரிமாற்றம்) அட்டவணை iiல் விதிகள் 2000 கூறியதற்கேற்ப இருப்பின் பங்குவீத உரிமைத் தொகை மற்றும் பெருந்தொகைக் கட்டணம் வழங்கல் ஆகியன
- வணிக உரிமைக்குறி, வணிகத் தனியுரிமை ஆகியவற்றைப் பயன்படுத்த செலவிடுதல், இதில் இவ்வுரிமைகளை வாங்கிச் செயல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியின் முன்கூட்டிய அனுமதி தொடர்ந்து தேவைப்படுகிறது.
இந்தப் பரிமாற்றங்களுக்கு முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்கூட்டிய ஒப்புதல் தேவைப்பட்டது. அதைப் போன்றே தனிப்பட்ட நபருக்கான உடல்நல காப்புறுதிக்கு வெளி நாட்டுக் குழுமத்திற்குச் செலுத்தப்படும் செலவினத்திச்கு இந்திய அரசாங்கத்தின் முன்கூட்டிய ஒப்புதல் தேவையில்லை.
நடைமுறைப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகள் அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு அனுப்பட்டுள்ளன.
பி.வி.சதானந்தன
மேலாளர்
பத்திரிகை வெளியீடு 2003-2004/1019