RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78450123

நடப்புக்கணக்கு நடவடிக்கைகள் – தாராளமயமாக்கல்

நடப்புக்கணக்கு நடவடிக்கைகள் தராளமயமாக்கல்
A.P. (DIR Series) சுற்றறிக்கை எண் 3 (ஜுலை 17, 2003)
இந்திய ரிசர்வ் வங்கி
அன்னியச் செலாவணித் துறை
மைய அலுவலகம்
மும்பை – 400 001.

 

A.P. (DIR Series) சுற்றறிக்கை எண் 3 ஜுலை 17, 2003

அங்கிகரிக்கப்பட்ட அந்நியச்செலாவணி வணிகர் அனைவருக்கும்

அன்புடையீர்,

நடப்புக்கணக்கு நடவடிக்கைகள் – தாராளமயமாக்கல்

அந்நியச்செலாவணி கண்காணிப்பு (நடப்புக்கணக்கு நடவடிக்கைகள்) (அவ்வப்போது திருத்தப்படும்) விதிகள் 2000ன் அட்டவணை IIIல் உள்ள விதி 5ன் படி, அந்நியச்செலாவணி வழங்குதலுக்கான் நடைமுறையிலுள்ள வரையறைகளை அங்கிகரிக்கப்பட்ட வணிகர்கள் கவனிப்பார்களாக. தாராளமயமாக்கலின் ஒரு கட்டமாக, நடப்பில் உள்ள வரையறைகளைப் பின்வருமாறு அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

வரிசை எண்

அட்டவணை IIIல்

குறிப்பு

எண்

நோக்கம்

தற்சமயம் உள்ள வரையறை

(அமெரிக்க டாலர்)

முன்மொழிய உள்ள வரையறை (அமெரிக்க

டாலர்)

1.

5

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

5000

1,00,000

2.

6

குடியேற்றம்

5,000

1,00,000

3.

7 (ii)

வெளிநாட்டிலுள்ள நெருங்கிய உறவினரின் பராமரிப்பு

5,000

1,00,000

4.

10

வெளிநாட்டில் கல்வி

30,000

1,00,000

 

A.2 விண்ணப்பப்படிவங்கள் மற்றும் நடவடிக்கைகளின் விவரங்கள் அடங்கிய உறுதிமொழியின் பேரிலும் வேறெந்த ஆவணச்சான்றையும் வலியுறுத்தாமல் அங்கிகரிக்கப்பட்ட வணிகர்கள் மேற்கணட ஓவ்வொரு பிரிவுக்கும் வரையறுக்கப்பட்ட அளவிற்கு அந்நியச்செலாவணி அனுப்ப அனுமதிக்கலாம். அந்த சமயங்களில் அயல்நாட்டு நாணயம் வாங்கத்தேவையான பணத்தை விண்ணப்பதாரர் காசோலையாகவோ, அல்லது கேட்பு வரைவோலையாகவே அல்லது அவரின் கணக்கில் பற்று வைத்தோ அளிக்கலாம்.

மருத்துவசிகிச்சை

3. மருத்துவமனை மற்றும் வருத்துவரிடமிருந்து எந்த மதிப்பீட்டையும் வலியுறுத்தாமல், அயல்நாட்டில் மருத்துவசிகிச்சைக்கான செலவுக்காக அமெரிக்க டாலர் 50,000 அல்லது அதன் மதிப்புள்ள தொகைக்கு அந்நியச்செலாவணி அனுப்பிட இயலும் என்பது A.P.(DIR) Series சுற்றறிக்கை எண் 17. செப்டம்பர் 12, 2000 தேதியிட்டதில் சொல்லப்பட்டுள்ளது என்பதனை அங்கிகரிக்கப்பட்ட வணிகர்கள் கவனிக்கவும். இந்தியாவில் அல்லது அயல்நாட்டிலுள்ள மருத்துவர் அல்லது மருத்துவமனையின் மதிப்பீடு ஏதுமின்றி குடியிருப்பு இந்தியர் டாலர் 1,00,000 அல்லது அதன் மதிப்புத் தொகைக்கு அந்நியச்செலாவணியை அங்கிகரிக்கப்பட்ட வணிகர்கள் இனிமேல் வழங்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது. பாரா 3ல் உள்ள மற்ற கட்டளைகள் மாற்றப்படவில்லை.

ஆலோசனை சேவைகள்

4. இதேபிரிவில் அட்டவணை IIIல் உள்ள விரிவு 15ல் குறிப்பிட்டுள்ளபடி வெளிநாட்டிலிருந்து பெறப்படும் ஆலோசனை சேவைகளுக்கான ஒருதிட்டத்திற்கான் வரையறுக்கப்பட்ட தொகை 1 லட்சம் அமெரிக்க டாலரிலிருந்து 1 மில்லியன் அமெரிக்க டாலரிலாரக உயர்த்தப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அங்கிகரிக்கப்பட்ட வணிகர்கள் தமக்குத் திருப்தியளிக்கும் வகையில் ஆவணங்கள் தரப்பட்டால், ஒரு திட்டத்திற்கு 1 மில்லியன் அமெரிக்கடாலர் மதிப்பு வரை அந்நியச்செலாவணி அனுப்ப அனுமதிக்கலாம்.

5. அந்நியச்செலாவணி கண்காணிப்பு (நடப்புக்கணக்கு நடவடிக்கைகள்) விதிகள் 2000ல் செய்யப்படும் திருத்தங்கள் பின்னர் தனியே அறிவிக்கப்படும்.

6. அங்கிகரிக்கப்பட்ட வணிகர்கள் இந்த சுற்றறிக்கையில் அடங்கியுள்ள கருத்துக்களைத் தத்தம் குழு முகவர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்வாராக.

7. இந்த சுற்றறிக்கையில் அடங்கியுள்ள கட்டளைகள் யாவும் சட்டப்பிரிவு எண் 10(4) மற்றும் 11 (i)ன் கீழ் வெளியிடப்படுகின்றன.

FEMA 1999 (42 of 1999).

 

நம்பிக்கையுள்ள

 

கிரேஸ கோஷி

தலைமைபபொது மேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?