RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78442443

வாடிக்கையாளர் சேவை-வெளியூர் மற்றும் உள்ளூர் காசோலைகளுக்கு உடனடி பற்றுவைப்பு - வரம்பு உயர்த்தப்படுதல்

Ref.dbod.no.leg.bc.21./09.07.007/2002-03

ஆகஸ்ட் 23, 2002

அனைத்து வணிக வங்கிகளுக்கும்
(பிராந்திய கிராம வங்கி மற்றும் வட்டார வங்கிகள் நீங்கலாக)
அன்புள்ள ஐயா

வாடிக்கையாளர் சேவை-வெளியூர் மற்றும் உள்ளூர் காசோலைகளுக்கு உடனடி பற்றுவைப்பு - வரம்பு உயர்த்தப்படுதல்

வெளியூர் மற்றும் உள்ளூர் காசோலைகளுக்கு ரூ7500 வரை உடனடி பற்றுவைப்பு அளிக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்ட எங்களது மே 29, 2000 தேதியிட்ட சுற்றறிக்கை DBOD.NO.BC 181/09.07.007/99-2000 தயவு செய்து பார்க்கவும்.

2. இந்திய வங்கிகள் சங்கத்தின் சிபாரிசுகளின் அடிப்படையில், வெளியூர் மற்றும் உள்ளூர் காசோலைகளுக்கு உடனடி பற்று வைப்புபிற்கான உச்ச வரம்பு ரூ7500லிருந்து ரூ15000 ஆக, ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிடும் நடப்பிலுள்ள வழிகாட்டு நெறிகளுக்குட்பட்டு, உயர்த்தப்படவேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

3. வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்கும், வெளியூர் மற்றும் உள்ளூர்

காசோலைகளுக்கு உடனடி பற்றுவைப்பு அளிக்க நடப்பிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வங்கிகள் கடைபிடிக்கவேண்டும் என்று உத்தரவுகள் அடிப்படையில் தெரிவிக்கப்படுகிறது. அவை :-

(i) வெளியூர் காசோலைகளுக்கு சாதாரண வசூல் கட்டணத்தையும் உள்ளூர் காசோலைகளுக்கு ரூ5 கட்டணமாகவும் பெறப்படலாம

(ii) வாடிக்கையாளர் தன் கணக்கில் முறையாக நடந்து கொள்கிறார் என்பதில் வங்கி திருப்தியடைய வேண்டும்.

(iii) சேமிப்பு, உடனடி மற்றும் பண பற்று கணக்கு என்று வித்தியாசம் பார்க்காமல் அனைத்து தனிப்பட்ட வைப்புதாரர்களுக்கும் வங்கி இவ்வசதியை வழங்கிட வேண்டும்.

(iv) இவ்வசதியை வழங்கிட வைப்புத்தொகையில் குறைந்த பட்ச தொகை இருக்கவேண்டும் என்று வங்கிகள் நிர்ப்பந்திக்கக்கூடாது.

(v) வழக்கமான முன்னெச்சரிக்கைகளுக்குட்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வங்கி தன் துணை அலுவலங்களிலும் வழங்கலாம்.

(vi) காசோலைகளுக்கு உடனடி பற்றுவைப்பு என்பது முன் பணத்தொகை அளிப்பதாக இருப்பினும், ரூ15,000 வரை மதிப்புள்ள காசோலைகளுக்கு வட்டி விதிக்கப்படாதது, முன்தொகை மீதான வட்டி விதிக்கப்படாதது, முன்தொகை மீதான வட்டி விகிதங்களுக்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிகளை மீறியதாக ஆகாது.

(vii) ரூ15,000க்கும் மேற்பட்ட மதிப்பிலான காசோலை பெறப்பட்டால் அதிலிருந்து பெறப்பட்டவை அந்த கண்க்கில் பற்று வைக்கப்ப்டும். அதற்குரிய நாளுக்குமுன் அந்த தொகை பெறப்படும்போது, அத்தொகைக்கான பிடிக்கப்பட்ட வட்டியும் (வங்கியால் வழக்கமாக விதிக்கப்ப்டும் சேவைக் கட்டணத்தையும் சேர்த்து) பயன்படுத்தப்பட்ட நிதிக்காக வ்சூலிக்கப்படும்.

(viii) ஒருவேளை காசோலை பணமாக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டால், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி நிதி இல்லாத காலத்திற்கான வட்டி வசூளிக்கப்படும்.

(a) வெளியூர் காசோலைகளுக்கு அவை அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட நாள்வரை வாடிக்கையாளருக்கு வட்டி வசூலிக்கப்படமாட்டாது.

(b) காசோலைகள் திருப்பி அனுப்பட்ட தேதியிலிருந்து வங்கிக்கு அவற்றிற்கான பணம் செலுத்தப்பட்ட நாள்வரை வங்கிகள் வட்டி வசூலிக்கலாம்.

(c) சேமிப்பு வங்கியில் ஒரு காசோலை பற்று வைக்கப்பட்டு, அந்த காசோலை பணமாக்கப்படாமல் திரும்பி வருமேயானால் அந்த தொகைக்கு வட்டி வழங்கப்பட மாட்டாது.

(ix) வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் திருப்பி அனுப்பபடும் காசோலைகளுக்கு, அதற்கான கால கட்டத்திற்கு வாடிக்கையாளர் வட்டி செலுத்த வேண்டும். இதனை மேற்குறிப்பிட்டு வெவ்வேறுவித செலுதும் சீட்டுக்களை வங்கிகள் அறிமுகப்படுத்துவது பற்றி யோசிக்கலாம்.

(x) ஒவ்வொரு வங்கிக்கிளையிலும் மேற்குறிப்பிட்ட சேவைகளைப்பற்றி தெளிவான அறிவிப்பாக காட்சிக்கு வைத்திடல் வேண்டும்.

4. நீங்கள் இவற்றைப் பற்றி, உங்கள் கிளைகளுக்கு உடனடி செயலாக்கத்திற்கு தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கலாம்.

5. தயவு செய்து பொற்றுக்கொண்டமைக்கும் ஒப்புதல் அளிக்கவும்.

 

தங்ளின் நம்பிக்கைக்குரிய

 எம்.ஆர்.சீனிவாசன்
த்லைமைப் பொது மேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?