வாடிக்கையாளர் சேவை-வரைவுக் காசோலையின் நகல் வழங்க்ல்
RBI/2006-07/173
DBOD.NO.LEG.BG.42/09.07.005/2006-07 நவம்பர் 10, 2006
பிராந்திய
கிராமப்புற
வங்கிகள்
தவிர
அட்டவணையிலுள்ள
அனைத்து
வங்கிகளுக்கும்
அன்புடையீர்,
வாடிக்கையாளர் சேவை-வரைவுக் காசோலையின் நகல் வழங்க்ல்
2000 மார்ச் 9 எங்கள் சுற்றறிக்கை DBOD.NO.BC.147/09.07.007/ 99-2000ஐப் பார்க்கவும். வாடிக்கையாளரிடமிருந்து விண்ணப்பம் கிடைக்கப்பெற்று இரு வார காலத்திற்குள் அவருக்கு வரைவுக் காசோலையின் நகலை வழங்கிட வேண்டும் என்று அதில் அறிவுறுத்தியிருந்தோம். இந்த இருவார கால அவகாசத்திற்குள் வரைவுக் காசோலை நகல் வழங்கப்படாவிட்டால், அதற்கு அப்பாற்பட்ட காலத்திற்கு வைப்புத் தொகைக்கு வழங்கும் வட்டியினை வழங்கிட வேண்டும்.
2. வாடிக்கையாளர் என்ற வார்த்தையைப் பயன் படுத்தி வரைவுக் காசோலை நகலை இருவார காலத்திற்குள், வாங்கியவர்/பயன் பெறுவர்/இருவர் தவிர காசோலை வைத்திருக்கும் நபர் என்று யாருக்கு வேண்டுமானாலும் வழ்ங்கலாமா என்ற வினாக்கள் எழுகின்றன.
3. 2000 மார்ச் 9 சுற்றறிக்கையில் அறிவுறுத்தியிருந்த இருவார காலமென்பது வாங்கியவர்/பயன் பெறுபவர் என்ற இருவருக்கு மட்டுமே பொருந்தும். மூன்றாவது நபர் வரைவுக் காசோலை நகல் கேட்டால் அவருக்கு இந்த அறிவுரைகள் பொருந்தாது.
4. கிடைத்தமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
நம்பிக்கையுள்ள
பிரசாந் சரண்
தலைமைப் பொது மேலாளர் பொறுப்பு
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: