RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78441334

வாடிக்கையாளர் சேவை-மோசடியான அலலது அதுபோன்ற தொழில் நடைமுறைகளால் தவறான பற்றுவைப்புக் கணக்குகளை செயல்மாற்றுதல்

DBOD.LEG.BC.86/09.07.007/2001-02                     எப்ரல் 8, 2002

அன்புடையீர்

வாடிக்கையாளர் சேவை-மோசடியான அலலது அதுபோன்ற தொழில் நடைமுறைகளால் தவறான பற்றுவைப்புக் கணக்குகளை செயல்மாற்றுதல்

 வைப்புக் கணக்குகளை ஆரம்பிப்பதிலும் செயல்படுத்துவதிலும் வங்கிகள் மேற்கொள்ளவேண்டிய வழிகாட்டு நெறிகளையும் முறைமைகளையும் சுட்டிக்காட்டும் மே 4, 1995 தேதியிட்ட DBOD.BP.BC.57/21.01.001/95 (பிரதி இணைக்கப்பட்டுள்ளது) சுற்றறிக்கையை பார்க்கவும். பணம் செலுத்தும் சாதனங்களை மோசடி முடையில் பணமாக்கிட வைப்புக் கணக்குகளைத் துவக்கி அவற்றை உபயோகித்துக் கொள்ளும் தவறான நபர்களுக்கு எதிரான பாதுகாப்பாக அது அமைந்துள்ளது. எனினும், மிகப் பிரபலமான நிறுவனங்களின் பெயரிலோ அல்லது அதே போன்றோ வைப்புக் கணக்குகள் துவக்கி மோசடி முறையில் பணமாக்கிடும் தவறான நபர்களைப் பற்றி எங்களுக்கு புகார்கள் தொடர்ந்து வருகின்றன. இதனால் முறையாக கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் தேவையில்லாத தவறான பதிவுகள் நிகழ்கின்றன. இத்தகைய குறைபாடுகளைத் தவிர்க்க வங்கிகள் விழிப்புணர்வோடு இருப்பது மட்டுமல்லாமல் கிளைகளுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான உத்தரவுகளை அளிக்க வேண்டும்.

2. இதுதவிர மேற்சொன்னமாதிரி சமயங்களில், நேர்மையான நிகழ்வுகளைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்குக் கூட பணத்தை சரியான முறையில் திருப்பி அளிப்பதில்லை. துறை நடவடிக்கை அல்லது காவல்துறை விசாரணை முடியும்வரை நடவடிக்கை தாமதப்படுத்தப்படுதிறது. இது தொடர்பான DBOD.NO.COM.BC.18/c.408a-78 பிப்ரவ்ரி 15 தேதியிட்ட 1978 சுற்றறிகையை (பிரதி இணைக்கப்பட்டுள்ளது) நினைவுபடுத்துகிறோம். அதன்படி, வங்கி தனது பணியாளரால் ஏதேனும் ஒரு பகுதியில் மோசடியோ தவறோ நடந்துள்ளது என்று நம்பும்பட்சத்தில் அந்த கடன்டாட்டை ஒப்புக்கொண்டு அதற்கான நியாயமான கோரிக்கைக்கு பணம் செலுத்தும்.

3. இவ்விஷயத்தில் வாடிக்கையாளர்களின் வருத்தங்களை நிவர்த்திக்க, நிலைமையை ஆய்ந்து கீழ்க்கண்டவாறு அறிவுறுத்துகிறோம்.

(i) வங்கிகள் தவறிழைத்த சமயங்களில், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எந்த ஆட்சேபமும் இன்றி இழப்பீடு செய்ய வேண்டும்.

(ii) சில நேர்வுகளில் வங்கி மேலும் தவறில்லமல் அமைப்பு முறையில் எங்கோ தவறு இருக்கும்பட்சத்தில், அப்பொழுதும் வங்கிகள் வாடிக்கையாளருக்கு, குழுமம் ஒப்புதல் அளித்த வாடிக்கையாளர் உறவு கொள்கையின் ஒரு பகுதியாக இழப்பீடு (ஒரு வரம்பு வரை) செய்ய வேண்டும்.

4. பெற்றமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

உங்கள் நம்பிக்கைக்குறிய

 எம்.ஆர். ஸ்ரீனிவாசன்

தலைமைப் பொது மேலாளர்-பொறுப்பு

இணைப்பு : மேலே கண்டபடி

Ref.DBOD.No.COM.BC.18/C.408A-78 15 பிப்ரவரி 1978

அனைத்து வணிக வங்கிகளின் தலைமை இயக்குநர்களுக்கும்

அன்புடையீர்

வங்கிகளில் மோசடிகள்

 

சமீபத்தில் எங்கள் கவனத்திற்கு ஒரு செய்தி என்னவென்றால் ஒருவர் பணம் அளிக்கும் வங்கியின் காலோலையில் பணம் பெறுபவரின் பெயரை மாற்றியும் தொகைமற்றும் தேதி மேலெழுதி மாற்றியும் மூலத்தில் மாற்றங்கள் செய்து மோசடி செய்துள்ளார். அந்த நபர் மாற்றப்பட்ட காசோலையை மூன்றாவது வங்கியில் (பெறும் வங்கி) தன் கணக்கில் வரவு வைத்து பிறகு அப்பணத்தை எடுத்துக் கொண்டார். இவ்வாறு நடந்ததில் பணத்தை இழந்த கணக்குதாரர் விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்கிறார். நீதிமன்றம் இரு வங்கிகளையும் அதாவது பெறும் வண்கி மற்றும் கொடுக்கும் வங்கி முழுவதும் கவனமின்மையாக இருந்ததாக கூறுகிறது. நீதிமன்றம் தனது தீர்ப்பில், வங்கி தனது பணியாளரால் ஏதேனும் ஒரு பகுதியில் மோசடியோ தவறோ நடந்துள்ளது என்று நம்பும் பட்சத்தில் அந்த கடன்பாட்டை உடனே ஒப்புக்கொண்டு அதற்கான நியாயமான கோரிக்கைக்கு பணம் செலுத்த வேண்டும். இதன்படி தேவைற்ற ழக்குகளைத்த் தவிர்த்து பொதுமக்களுடன் நேர்மையான பரிவர்த்தனைக்கு ஒரு உதாரணம் ஏற்படுத்தப்படுகிறது. உயர் நீதி மன்றத்தின் உற்று நோக்குதல்களை வங்கிகள் அமல் படுத்த மேண்டுமென்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

உங்கள் நம்பிக்கைக்குரிய

பீ.கே. வெங்கடேஸ்வரன்

இணை தலைமை அதிகாரி

 

BP.BC.57/21.01.001/95

Ref.DBOD.BO.BC.57/21.01.001/95, MAY 4, 1995 (19950504)

வங்கிகளில் மோசடிகள்-வைப்புக் கணக்குகளைக் கண்காணித்தல்

 எங்களது DBOD.NO.GC.BC.193/17.04.001/93, 1993ம் ஆண்டு நவம்பர் 18 தேதியிட்ட மற்றும் BP.BC.106/21.01.011/14 1994ம் ஆண்டு செப்டெம்பர் 23 தேதியிட்ட சுற்றறிக்கைகளை தயவு செய்து பார்க்கவும். இதில், வங்கிகள் வைப்புக் கணக்குத் தொடங்கவும் நடத்திடவும் வங்கிகள் கடுமையாக கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிகளையும் முறைமைகளையும் அவற்றின் தேவையையும் வலியுறுத்துகிறோம். இது, பினாமி (பொய்யான) கணக்குகளைத் தொடங்கி அவற்றின் வழியாக மூன்றாவது நபரின் காசோலைகள் மற்றும் வரைவோலைகளை மோசடி முறையில் காசாக்கும் தவறான மனிதர்களுக்கெதிரான பாதுகாப்பாக அமைந்துள்ளது. வங்கிக் கணக்குகள் தவறாகப் பயண்படுவதை தடுப்பதற்கு மேலும் ஒரு பாதுகாப்பு அம்சமாக (DBOD.NO.GC.202/17.04.001/93, 1993 டிசம்பர் 6 தேதியிட்ட சுற்றறிகையின்படி) 1994 ஜனவரி 1 லிருந்து தொடங்கப்பட்ட புது வைப்புக்கணக்குகளில் கணக்கை நடத்திட அதிகாரம் பெற்ற கணக்கு வைத்திருக்கும் வைப்புதாரர்களின் புகைப்படங்களை பெற்றிடவேண்டும்.

புதுவைப்புக்கணக்குகளை தொடங்கும்போதும் நடத்திடும்போதும், தேவையான பாதுகாப்பு நெறிகளை மீறுவதும், முறைமைகளை தவிர்ப்பதும், கிளை அதிகாரிகளுக்கு எதிரான தண்டனை நடவடிகையை பெற்றுத் தரும் என்பதனைப் பற்றிய எச்சரிக்கையை கிளைகளுக்கு அளிக்கவேண்டும் என்று வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன.

2. இவ்விஷயத்தில் தொடர்ந்து உத்தரவுகள் அளித்தாலும், மோசடி கணக்குகள் தொடங்கப்படும் சம்பவங்களும், மூன்றாவது நபரின் கணக்கு உள்ள காசோலைகளையும், வட்டி மற்றும் ஈவு பங்கு ஆணைகள், பணம் திருப்பி அளிக்கும் ஆணைகள் ஆகியவைகளை மோசடிமுறையில் பணமாக்கிடுதல் பற்றியும் எங்களுக்கும் இந்திய பங்கு பத்திர பரிவர்த்தனை வாரியத்திற்கும் (செபி) புகார்கள் அளிக்கப்படுவதை கவனிக்கிறோம். பொதுமாக அவ்வகை கணக்குகள் தவறான நபர்களால் பணம் திசைத்ருப்பிவிடப்பட்ட பிறகு குறைவான காலத்தில் மூடப்படுதின்றன.

வைப்புக் கணக்குகள் ஆரம்பிப்பதையும் நடத்தப்படுத்துவதையும் கண்காணிக்கும் அமைப்பை மேலும் வலுவாக்கிட வங்கிகள் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

(a) புதிய வைப்புக் கணக்குகளை நெருங்கிய முறையில் கண்காணித்திடும் அமைப்பை அறிமுகப்படுத்தவேண்டும். புதிதாக தொடங்கப்படும் கணக்குகளை கண்காணிப்பது வைப்புக் கணக்கு பிரிவு அல்லது துறை நிர்வாகிகளின் பிரதான பொறுப்பாக இருந்தாலும், கிளை மேலாளர்களும் அல்லது கிளையின் வைப்புக் கணக்குப் பிரிவின் மேலாளர்களும் முதல் மூன்று மாதங்களுக்கு எதேனும் மோசடியான அல்லது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் நடக்கின்றனவா என்று உன்னிப்பாக கண்காணித்திடவேண்டும் என வங்கிகள் தங்கள் கிளைகளுக்கு அறிவுறுத்திட வேண்டும். தொடக்க காலமான மூன்று மாதங்களில் ஏதேனும் தவறான பரிவர்த்தனைகள் நடந்தது அம்பலமானால் மேற்குறிப்பிட்ட அனைவரும் தனிப்பட்ட முறையில் பொறுப்பாவார்கள் என்பது வலியுறுத்தப்படவேண்டும்.

(B) பெரிய தொகைகளை கணக்கிலிருந்து திரும்ப எடுப்பதை உனிப்பாக கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்திட வேண்டும். ஏற்கணவே உள்ள மற்றும் புதிதாக தொடங்கப்படும் கணக்குகளில், மூன்றாவது நபரின் காசோலைகள் மற்றும் வரைவோலைகளை செலுத்தி பின் பெரிய தொகையாக எடுப்பது, மொத்த பரிவர்த்தனையைப் பற்றியும் சந்தேகத்தை உருமாக்குவது கவன்க்கப்படுகிறது. எங்களது DBOD.NO.FMC.BC.153/27.01.003/93-94 1993 செப்டெம்பர் 1 தேதியிட்ட சுற்றரிக்கையின்படி, பெரிய தொகைகள் திரும்ப எடுக்கப்படும்போது கிளை மேலாளர்கள் உன்னிப்பாக கண்காணித்திடவேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. வைப்புக் கணக்கு மட்டுமல்லாமல் பணக்கடன் மற்றும் இருப்புக்குமேல் பணம் எடுப்பு கணக்கு போன்ற அனைத்து கணக்குகளிலும் ரூ10 லட்சமும் அதற்கு மேலும் பணம் போடவோ மற்றும் எடுக்கவோ நிகழும் அனைத்து பரிவர்த்தனைகளையும் உன்னிப்பாகக் கண்காணிக்க அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என நாங்கள் அறிவுறுத்துகிறோம். இது தவிர வங்கிக் கிளைகள், ரூ10 லட்சமும் அதற்கு மேலும் தனிப்பட்ட முறையில் பணம் போடும் மற்றும் எடுக்கும் விவரங்களை ஒரு தனிப்பட்ட பதிவேட்டில் பதிவு செய்து பராமரித்திடல் வேண்டும். பதிவு செய்யப்படும் விவரங்கள், வைப்பாக இருந்தால் கணக்குதாரரின் பெயர் கணக்கு எண், வைப்பாக வைக்கப்பட்ட தொகை ஆகியவையும் எடுப்பாக இருக்கும் பட்சத்தில் கணக்குதாரரின் பெயர் கணக்கு எண், எவ்வளவு தொகை எடுக்கப்பட்டது மற்றும் அக்காசோலையால் பயன்பெறும் நபரின் பெயர்.

தயவு செய்து பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புதல் அளிக்கவும். மற்றும் இந்த உத்தரவுகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதற்காக கவனத்தில் கொள்ளப்பட்டன என்பதனை உறுதிப்படுத்தவும்.

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?