இறந்துபோன வைப்புத்தொகையாளரின் கணக்குகள் - கேட்புரிமைகளைத் தீர்வுசெய்வதில் இன்னல்களை தவிர்க்க வங்கிகளுக்குக் கூறுகிறது ரிசர்வ் வங்கி - ஆர்பிஐ - Reserve Bank of India
இறந்துபோன வைப்புத்தொகையாளரின் கணக்குகள் - கேட்புரிமைகளைத் தீர்வுசெய்வதில் இன்னல்களை தவிர்க்க வங்கிகளுக்குக் கூறுகிறது ரிசர்வ் வங்கி
இறந்துபோன வைப்புத்தொகையாளரின் கணக்குகள்
கேட்புரிமைகளைத் தீர்வுசெய்வதில் வசதிக்குறைவினையும்
இன்னல்களையும் தவிர்க்கவும்
வங்கிகளுக்குக் கூறுகிறது ரிசர்வ் வங்கி
இறந்துவிட்ட ஒரு வைப்புத்தொகையாளரின் கேட்புரிமைகளை இன்னல்களின்றியும் விரைவாகவும் தீர்வுசெய்யும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி கணக்குடையோர் அல்லது உயிருடனிருப்போர் என்னும் பிரிவுக் கணக்குகளிலும் வாரிசு குறிப்பிடப்படாத கணக்குகளிலும் உள்ள இறந்துவிட்டோர் கணக்குகளிலும் உள்ள மீதித்தொகையினை விடுவிப்பதற்கு குறைந்தபட்சப் பதிவுகளுடன் கூடிய எளிய முறையினைக் கடைப்பிடிக்குமாறு வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இறந்துபோனவரின் கணக்கில் உள்ள தொகை எவ்வளவு என்பதைக் கருதாமல் அந்தத் தொகையினை கணக்குடையோர் அல்லது உயிருடனிருப்போர் என்னும் பிரிவுக் கணக்குகளுக்கு உயிருடனிருப்போருக்கு அல்லது நியமிக்கப் பட்டோருக்கு வாரிசுச் சான்றிதழ், நிருவாகக் கடிதம், இழப்பெதிர்காப்பு பத்திரம் அல்லது பிணையம் போன்றவற்றை வலியுறுத்திக் கேட்காமல் கணக்கிலுள்ள மீதித் தொகையை விடுவிக்க வேண்டும் என்று வங்கிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்களால் எதிர்கொள்ளப்படும் இன்னல்களை இது தவிர்க்கும் என்பதால் கணக்குடையோர் அல்லது உயிருடனிருப்போர் பிரிவு அல்லது பேராளரை நியமித்தல் என்னும் பிரிவுக்கணக்குகளில் உள்ள அணுகூலங்களைப் பொதுமக்கள் அறியும்படி விரிவாக விளம்பரப்படுத்த வேண்டும் என்று வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.