குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் ரூ. 500 மற்றும் ரூ. 1000 ஆகியவை சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது – சிறுசேமிப்புத் திட்டங்களில் டெபாசிட் செய்வது தொடர்பாக - ஆர்பிஐ - Reserve Bank of India
குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் ரூ. 500 மற்றும் ரூ. 1000 ஆகியவை சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது – சிறுசேமிப்புத் திட்டங்களில் டெபாசிட் செய்வது தொடர்பாக
அறிவிப்பு எண் 151 நவம்பர் 23, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் ரூ. 500 மற்றும் ரூ. 1000 ஆகியவை சட்டப்படி குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் ரூ. 500 மற்றும் ரூ. 1000 ஆகியவை சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டதற்கான நவம்பர் 08, 2016 தேதியிட்ட சுற்றறிக்கை DCM. (Plg) No. 1226/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். 2. சிறுசேமிப்புத் திட்டங்களில் சேமிப்பவர்கள், குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகளை சிறுசேமிப்புத் திட்டங்களில் டெபாசிட் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசு தீர்மானித்துள்ளதை உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். எனவே, வங்கிகள், இந்த சுற்றறிக்கை கிடைக்கப்பெற்றதிலிருந்து உடனடி செயலாக்கமாக, குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகளை சிறுசேமிப்புத் திட்டங்களில் டெபாசிட் செய்ய ஏற்றுக்கொள்ளக் கூடாது. 3. தயவு செய்து பெற்றமைக்கு ஒப்புகை அளிக்கவும். இங்ஙனம் (P. விஜயகுமார்) |