RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78517510

சிவாஜிராவ் போசலே சஹாகரி பாங்க் லிமிடெட், புனே, மஹராஷ்ட்ரா நிறுவனத்திற்கு வழங்கிய வழிகாட்டு உத்தரவுகளின் கால நீட்டிப்பு

அக்டோபர் 25, 2019

சிவாஜிராவ் போசலே சஹாகரி பாங்க் லிமிடெட், புனே, மஹராஷ்ட்ரா நிறுவனத்திற்கு
வழங்கிய வழிகாட்டு உத்தரவுகளின் கால நீட்டிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி மே 03, 2019 தேதியிட்ட வழிகாட்டு உத்தரவின்படி, சிவாஜிராவ் போசலே சஹாகரி பாங்க் லிமிடெட், புனே, மஹராஷ்ட்ரா -வை மே 04, 2019 வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைத்தது.

இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35(1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்கண்ட உத்தரவுகளை அக்டோபர் 18, 2019 தேதியிட்ட உத்தரவின்படி மறுஆய்வுக்கு உட்பட்டு மே 04, 2020 வரை தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது என்பதைப் பொது மக்களின் தகவலுக்காக தெரிவிக்கிறது.

மேற்கண்ட நீட்டிப்பை அறிவிக்கும் உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

இவ்வாறு உத்தரவுகளில் திருத்தங்கள், மாற்றங்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதால், வங்கியின் நிதிநிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளது என்பதைக் குறிக்காது.

யோகேஷ் தயால்     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு : 2019-2020/1029

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?