வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (AACS) இன் 35 A வழிகாட்டுதல்கள் - கோமதி நகாரியா சஹகாரி வங்கி லிமிடெட், ஜான்பூர் (உத்தரப்பிரதேசம்) - கால நீட்டிப்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (AACS) இன் 35 A வழிகாட்டுதல்கள் - கோமதி நகாரியா சஹகாரி வங்கி லிமிடெட், ஜான்பூர் (உத்தரப்பிரதேசம்) - கால நீட்டிப்பு
தேதி: ஜூலை 11, 2018 வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (AACS) இன் 35 A வழிகாட்டுதல்கள் - இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கோமதி நகாரியா சகாரி வங்கி லிமிடெட், ஜான்பூர் (உத்தரப்பிரதேசம்) க்கு ஜூலை 11, 2018 முதல் நவம்பர் 10, 2018 வரை வழங்கிய உத்தரவுகளை பரிசீலனைக்கு உட்பட்டு மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACS) இன் கீழ் ஜூலை 10, 2017 தேதி அன்று வர்த்தகம் முடிவுற்ற நாளிலிருந்து ஜூலை 03, 2017 தேதியிட்ட உத்தரவின் படி வங்கி வழிகாட்டுதலின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக மாற்றியமைக்கப்பட்ட மற்றும் நீட்டிக்கப்பட்ட ஜனவரி 08, 2018 தேதியிட்ட ஆர்பிஐ உத்தரவு ஜூலை 10, 2018 வரை நீட்டிக்கப்பட்டு, மேலும் ஜூன் 26, 2018 தேதியிட்ட உத்தரவு மறு ஆய்வுக்கு உட்பட்டு, ஜூலை 11, 2018 முதல் நவம்பர் 10, 2018 வரை நான்கு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட உத்தரவின் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். ஜூன் 26, 2018 தேதியிட்ட உத்தரவின் நகல் பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும். அஜித் பிரசாத் செய்தி வெளியீடு : 2018-2019/102 |