RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78520931

சிவம் சஹகாரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம் - கோலாப்பூர், மகாராஷ்டிரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்திரவுகள்

ஆகஸ்ட் 1, 2020

சிவம் சஹகாரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம் - கோலாப்பூர், மகாராஷ்டிரா
நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்திரவுகள்

சிவம் சஹாகரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம், கோலாப்பூர், மகாராஷ்டிரா மே 18, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-6/12.22.351/2017-18 உத்தரவின்படி, மே 19, 2018 அன்று வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து வழிகாட்டுதல் உத்திரவின் கீழ் வைக்கப்பட்டது

2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கண்ட வங்கிக்கு வழங்கிய மே 18, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-6/12.22.351/2017-18 உத்தரவின் செல்லுபடி காலத்தை அவ்வபோது மாற்றியமைத்து, கடைசியாக ஜூலை 31, 2020 வரை நீட்டித்திருந்த நிலையில், தற்போது ஜூலை 24, 2020 தேதியிட்ட DOR.CO.AID/D5/12.22.351/2020-21 உத்தரவின்படி மதிப்பாய்வுக்கு உட்பட்டு ஆகஸ்ட் 01, 2020 முதல் அக்டோபர் 31, 2021 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து நீட்டிக்கிறது என்பதைப் பொது மக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது.

3. பார்வையில் கண்ட உத்தரவின் மற்ற நிபந்தனைகள் மாறாது இருக்கும். ஜூலை 24, 2020 தேதியிட்ட DOR.CO.AID/D5/12.22.351/2020-21 கால நீட்டிப்பை அறிவிக்கும் உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

4. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய கால நீட்டிப்பு மற்றும் / அல்லது திருத்தங்களால் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளதைக் குறிக்காது.

யோகேஷ் தயால்     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2020-2021/130

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?