வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும் வகையில்) ஸ்ரீ ஆனந்த் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட். சின்ச்வாட், புனே, மகாராஷ்டிரா - ஆர்பிஐ - Reserve Bank of India
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும் வகையில்) ஸ்ரீ ஆனந்த் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட். சின்ச்வாட், புனே, மகாராஷ்டிரா
ஜூலை 26, 2019 வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி பொது நலன் கருதி, ஸ்ரீ ஆனந்த் கோஆப்ரேட்டிவ் வங்கி லிமிடெட் சின்ச்வாட், புனே, மகாராஷ்டிரா, நிறுவனத்திற்கு சில வழிகாட்டுதல்களை வழங்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறது. அதன்படி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்தும்) –ன் சட்டப்பிரிவு 35 A பிரிவு (1)ன் உடன் இணைந்த பிரிவு எண் 56 ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, ஸ்ரீ ஆனந்த் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் சின்ச்வாட், புனே, மகாராஷ்டிரா ஜூன் 25, 2019 அன்று வர்த்தகம் முடிந்ததிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளில் குறிப்பிட்டுள்ளபடியன்றி, கடன் மற்றும் முன் தொகைகளை அளிப்பதோ, புதுப்பிப்பதோ, ஏதேனும் முதலீடு செய்வதோ, கடனாக பணத்தைப் பெறுவது மற்றும் புது டெபாசிட்டுகளை ஏற்றுக்கொள்வது, ஏதேனும் பணம் பட்டுவாடா செய்வது, அல்லது பட்டுவாடா செய்ய ஒப்புக்கொள்வது, வேறு பொறுப்புகள் மற்றும் நிர்ப்பந்தங்களுக்காக அல்லது வேறு எதற்காகவோ பணம் செலுத்துதல், நிதிசார் ஒப்பந்தங்கள் / ஏற்பாடுகள் செய்துகொள்ளுதல், வங்கியின் சொத்துக்களில் எதையேனும் விற்றல், மாற்றல் ஏதேனும் இங்கு வழங்கப்பட்ட விதம் தவிர அல்லது அவை சார்ந்த விவகாரங்களில் ஈடுபடுதல் கூடாது: i. குறிப்பாக மொத்த நிலுவையில் ரூ. 1,000/- க்கும் மிகாத தொகையை (ரூபாய் ஆயிரம் மட்டும்), இது எந்தக் கணக்கில் இருந்தாலும், அதாவது சேமிப்புக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது எந்தப் பெயரில் அழைக்கப்படும் எந்த ஒரு டெபாசிட்டாக இருந்தாலும் மேலே குறிப்பிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு உட்பட்டு, டெபாசிட் வைத்திருப்பவர் திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படலாம். ii. முதிர்ச்சியில் இருக்கும் கால வைப்புத்தொகையை அதே பெயரிலும் அதே திறனிலும் புதுப்பிக்கலாம். iii. பின்வரும் வங்கியால் பூர்த்தி செய்யப்பட வேண்டிய பணிகளுக்கு/ பொறுப்புகளுக்கு செலவுகளைச் செய்யலாம்.
iv. வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திற்கு செலுத்த வேண்டிய பிரீமியத்தை செலுத்தலாம். v. வங்கியின் அன்றாட நிர்வாகத்தை நடத்துவதற்குத் தேவையான வேறு எந்தவொரு பொருளுக்கும் இதுவரை செலவு செய்யப்பட்டிருந்தால் கடந்த ஆறு மாத காலத்தில், செலவு செய்த சராசரி அல்லது அந்த பொருளின் கணக்கில் எந்த செலவும் செய்யப்படவில்லை என்றால், அது ரூ. 1000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்) –க்கு மிகாமல் இருக்கவேண்டும். vi. அரசு / எஸ்.எல்.ஆர் அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்களில் முதலீடு செய்யலாம். vii. ஆர் பி ஐ யின் ஆலோசனையின் கீழ், மாதாந்திர அடிப்படையில் வங்கியின் தற்போதைய உறுப்பினர்களிடமிருந்து மூலதனத்திற்கான பங்களிப்பை ஏற்கலாம். viii. ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு கிராச்சுட்டி / வருங்கால வைப்பு நிதி சலுகைகள் தொடர்பாக பணம் செலுத்தலாம். ix. ஆர் பி ஐ யின் ஒப்புதலுடன் ஓய்வுபெறும் / ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு விடுப்பு என்காஷ்மென்ட் மற்றும் மேலதிக சலுகைகள்(superannuation benefits) தொடர்பாக பணம் செலுத்தலாம். x. இந்திய ரிசர்வ் வங்கியால் எழுத்துப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாவிட்டால் வேறு எந்தப் பொறுப்பையும் ஏற்படுத்தவோ அல்லது நிறுத்தவோ கூடாது. 2. கடன் வாங்குபவருடனான கடன் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அவரது குறிப்பிட்ட வைப்புக் கணக்கில் உள்ள தொகையை (எந்த பெயரால் அழைக்கப்பட்டாலும்) வங்கியால் தனது கணக்குடன் கையகப்படுத்தப்படலாம் / சரிசெய்யப்படலாம் என்று வழங்கினால், வைப்புக்கு எதிரான கடன்களை அமைக்க வங்கி அனுமதிக்கப்படுகிறது. கடன் கணக்கு, கடன் கணக்கில் நிலுவையில் உள்ள அளவிற்கு அத்தகைய ஒதுக்கீடு / சரிசெய்தல் (adjustment) பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செய்யப்படலாம்:
3. இந்த உத்தரவின் நகல் ஒவ்வொரு வைப்புத்தொகையாளருக்கும் வங்கியால் அனுப்பப்பட வேண்டும், மேலும் வங்கியின் வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்திலும் காட்டப்பட வேண்டும். 4. ஸ்ரீ ஆனந்த் கூட்டுறவு வங்கி லிமிடெட் சின்ச்வாட், புனே, மகாராஷ்டிராவுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் பரிந்துரைக்கப்படக்கூடிய அதன் செயல்பாடுகள் தொடர்பான அறிக்கைகளை தலைமை பொது மேலாளர், ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கி மேற்பார்வை துறை, மும்பை பிராந்திய அலுவலகம், சி -8, தரை தளம், பாந்த்ரா குர்லா வளாகம், மும்பை- 400051 க்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி மேலும் அறிவுறுத்துகிறது. 5. இந்த உத்தரவுகள் ஜூன் 25, 2019 அன்று வர்த்தக முடிவில் இருந்து மதிப்பாய்வுக்கு உட்பட்டு ஆறு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும். யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/253 |