1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகள் – கர்நாலா நகரி சகாகரி பாங்க் லிமிடெட், பன்வேல், ராய்காட் (மகாராஷ்டிரா) - ஆர்பிஐ - Reserve Bank of India
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகள் – கர்நாலா நகரி சகாகரி பாங்க் லிமிடெட், பன்வேல், ராய்காட் (மகாராஷ்டிரா)
ஜூன் 15, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, கர்நாலா நகரி சகாகரி பாங்க் லிமிடெட், பன்வேல், ராய்காட் (மகாராஷ்டிரா) வங்கிக்கு ஜூன் 15, 2020 தேதியிட்ட DoS.CO.UCBs-West/D-1/12.07.157/2019-20 உத்தரவின் படி மேற்கண்ட வங்கியின் நிர்வாகி ஆர்பிஐ இன் எழுத்துப்பூர்வமான முன் அனுமதி இன்றி கடன்கள் மற்றும் முன்பணங்கள் கொடுக்கவோ புதுப்பிக்கவோ கூடாது, புதிதாக முதலீடு தொடங்கக் கூடாது, கடன்கள் வாங்குதல் மற்றும் புதிதாக வைப்புத்தொகைப் பெறுதல் போன்ற எந்த ஒரு கடன்பாடையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது, கடமைக்காகவோ அல்லது பொறுப்பிற்காகவோ அல்லது வேறு எந்த ஒரு காரணத்திற்காகவோ கட்டணங்களைப் பட்டுவாடா செய்யவோ அல்லது பட்டுவாடா செய்ய ஒப்புக்கொள்ளவோ கூடாது, ஆர்பிஐ இன் ஜூன் 15, 2020 தேதியிட்ட உத்தரவில் உள்ளவாறு அன்றி வேறு எந்த விதத்திலும் வங்கியின் உடைமைகளையும் சொத்துக்களையும் விற்கவோ, பரிமாற்றம் செய்யவோ அல்லது அப்புறப்படுத்தவோ எந்த ஒரு சமரச நடவடிக்கையிலோ ஒப்பந்தத்திலோ ஈடுபடக்கூடாது போன்ற சில வழிகாட்டுதல்களை வெளியிடுள்ளது என்பதைப் பொது மக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது. மேற்கண்ட உத்தரவின் நகல் ஆர்வமுள்ள பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, வைப்புத்தொகையாளர் மொத்த நிலுவைத் தொகையில் ரூ. 500 (ரூபாய் ஐநூறு) க்கு மிகாத தொகையை சேமிப்புக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது வேறு எந்தக் கணக்கிலும் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதிக்கப் படலாம். 2. ஆர்பிஐ, மேற்கண்ட வழிகாட்டு உத்தரவுகளைப் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில் கொண்டு, வங்கியின் உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்வதாகக் கருதக்கூடாது. வங்கி அதன் நிதி நிலை மேம்படும் வரை வங்கி வர்த்தகத்தை கட்டுப்பாடுகளுடன் தொடரும். சூழ்நிலைகளைப் பொறுத்து உத்தரவுகளில் மாற்றங்களை ரிசர்வ் வங்கி பரிசீலிக்கலாம். 3. இந்த உத்தரவுகள் மறு ஆய்வுக்குட்பட்டு ஜூன் 15, 2020 அன்று வர்த்தக முடிவில் இருந்த ஆறு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும். (யோகேஷ் தயால்) பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2501 |