RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78520142

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (ஏஏசிஎஸ்) பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – சிட்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு

ஜூலை 15, 2020

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (ஏஏசிஎஸ்) பிரிவு 35 A உடன்
இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – சிட்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட்,
மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு

சிட்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, ஏப்ரல் 17, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-5/12.22.039/2017-18 உத்தரவுகளின் படி, ஏப்ரல் 17, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டுக் கடைசியாக ஏப்ரல் 07, 2020 தேதியிட்ட DOR.CO.AID.No.D-68/12.22.039/2019-20 உத்தரவின்படி, மதிப்பாய்வுக்கு உட்பட்டு ஜூலை 16, 2020 வரை நீட்டிக்கப்பட்டது.

2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பொருந்தும்) பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, சிட்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா வங்கிக்கு வழங்கிய ஏப்ரல் 17, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-5/12.22.039/2017-18 உத்தரவின் செல்லுபடி காலத்தை அவ்வபோது மாற்றியமைத்து, கடைசியாக ஜூலை 16, 2020 வரை நீட்டித்திருந்த நிலையில், தற்போது ஜூலை 10, 2020 தேதியிட்ட DOR.CO.AID.No.D-3/12.22.039/2020-21 உத்தரவின்படி மதிப்பாய்வுக்கு உட்பட்டு ஜூலை 17, 2020 முதல் அக்டோபர் 16, 2020 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து நீட்டிக்கிறது என்பதைப் பொது மக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது.

3. உத்தரவுகளின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும்.

4. மேற்கண்ட கால நீட்டிப்பை அறிவிக்கும் ஜூலை 10, 2020 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

5. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய கால நீட்டிப்பு மற்றும் / அல்லது திருத்தங்களால் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளதைக் குறிக்காது.

யோகேஷ் தயால்     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2020-2021/57

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?