1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – ஸ்ரீ ஆனந்த் கோ-ஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், சிஞ்ச்வாட், புனே, மகாராஷ்ட்ரா – கால நீட்டிப்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – ஸ்ரீ ஆனந்த் கோ-ஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், சிஞ்ச்வாட், புனே, மகாராஷ்ட்ரா – கால நீட்டிப்பு
செப்டம்பர் 24, 2021 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A ஸ்ரீ ஆனந்த் கோ-ஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா, ஜூன் 21, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-16/12.22.474/2018-19 உத்தரவுகளின் படி, ஜூன் 25, 2019 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து, ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு, கடைசியாக செப்டம்பர் 24, 2021 வரை நீட்டிக்கப் பட்டது. 2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, செப்டம்பர் 23, 2021 தேதியிட்ட DOR.MON.D-37/12.22.474/2021-22 உத்தரவின்படி, மதிப்பாய்வுக்கு உட்பட்டு, மேற்கண்ட உத்தரவுகளை நவம்பர் 24, 2021 வரை தொடர்ந்து நீட்டிக்கிறது என்பதைப் பொது மக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது. 3. உத்தரவுகளின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் யாவும் மாறாமல் இருக்கும். மேற்கண்ட கால நீட்டிப்பை அறிவிக்கும் செப்டம்பர் 23, 2021 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது. 4. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய கால நீட்டிப்பு மற்றும் / அல்லது திருத்தங்கள், வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளதைக் குறிக்காது. (யோகேஷ் தயால்) பத்திரிக்கை வெளியீடு: 2021-2022/928 |