RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78530793

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுக்குமுறை சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35A உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - அடூர் கோஆப்ரேட்டிவ் அர்பன் பாங்க் லிமிடெட், அடூர், கேரளா - கால நீட்டிப்பு

நவம்பர் 6, 2019

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுக்குமுறை சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35A
உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - அடூர்
கோஆப்ரேட்டிவ் அர்பன் பாங்க் லிமிடெட், அடூர், கேரளா - கால நீட்டிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் அடூர் கோஆப்ரேட்டிவ் அர்பன் பாங்க் லிமிடெட், அடூர், கேரளா நிறுவனத்திற்கு நவம்பர் 02, 2018 தேதியிட்ட DCBS.CO.PCC D-4/12.26.004/2018-19 உத்தரவின்படி நவம்பர் 9, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வெளியிட்ட வழிகாட்டு உத்தரவுகளை மே 03, 2019 தேதியிட்ட DCBR.CO.AID/No.D-43/12.26.004/2018-19 உத்தரவின்படி கடைசியாக நவம்பர் 09, 2019 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்தது.

இந்திய ரிசர்வ் வங்கி அந்த வங்கியின் நிதி நிலையை மறுஆய்வு செய்ததுடன், மேற்கூறிய உத்தரவுகளை நீட்டிப்பது பொது நலனில் அவசியம் என்று கருதுகிறது. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன்இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, அடூர் கோஆப்ரேட்டிவ் அர்பன் பாங்க் லிமிடெட், அடூர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நவம்பர் 02, 2018 தேதியிட்ட DCBS.CO.PCC.D-4/12.26.004/2018-19 உத்தரவுகள் கடைசியாக நவம்பர் 09, 2019 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 05, 2019 தேதியிட்ட DOR.CO.AID/No.D-36/12.26.004/2019-2 உத்தரவின்படி நவம்பர் 10, 2019 முதல் மே 09, 2020 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு மதிப்பாய்வுக்கு உட்பட்டு தொடர்ந்து நீட்டிக்கிறது. வழிகாட்டு உத்தரவின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும்.

யோகேஷ் தயால்      
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1119

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?