சௌன்டேஷ்வரி சஹகாரி வங்கி, இச்சால்கரன்ஞ்சி, கோலாப்பூர் வங்கிக்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS) பிரிவு 35A –ன் கீழ் வழிகாட்டு உத்தரவுகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
சௌன்டேஷ்வரி சஹகாரி வங்கி, இச்சால்கரன்ஞ்சி, கோலாப்பூர் வங்கிக்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS) பிரிவு 35A –ன் கீழ் வழிகாட்டு உத்தரவுகள்
செப்டம்பர் 03, 2015 சௌன்டேஷ்வரி சஹகாரி வங்கி, இச்சால்கரன்ஞ்சி, கோலாப்பூர் வங்கிக்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS) பிரிவு 35A –ன் கீழ் வழிகாட்டு உத்தரவுகள் வழிகாட்டு உத்தரவு UBD.CO.BSD-1/D-07/12.22.044/2014-15, ஆகஸ்ட் 28, 2014 தேதியிட்டதன்படி, ஆகஸ்ட் 30, 2014 அலுவல் நேர முடிவிலிருந்து சௌன்டேஷ்வரி சஹகாரி வங்கி, இச்சால்கரன்ஞ்சி, கோலாப்பூர் ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட வழிகாட்டு உத்தரவு மேலும் ஆறு மாதங்களுக்கு 05.02.2015 தேதியிட்ட ஆணையின்படி, மார்ச் 1, 2015-லிருந்து ஆகஸ்ட் 31, 2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால் ஆகஸ்ட் 28, 2014 உத்தரவுடன் பிப்ரவரி 05, 2015 தேதியிட்டதை சேர்த்து, உள்ள உத்தரவு காலம் செப்டம்பர் 01, 2015-லிருந்து மேலும் மூன்று மாதங்களுக்கு ஜூலை 31, 2015 தேதியிட்ட மறுஆய்வுக்கு உட்பட்ட ஆணையின் மூலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. . பார்வையில் உள்ள உத்தரவின் இதர விதிகள் மற்றும் நியமங்களில் மாற்றம் எதுவும் இல்லை. பொதுமக்களின் பார்வைக்காக, மேலே குறிப்பிட்டுள்ள ஜூலை 31, 2015 தேதியிட்ட திருத்தத்தை காட்டும் உத்தரவின் ஒரு பிரதி வங்கியின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, மேற்குறிப்பிட்ட திருத்தத்தை செய்துள்ளது என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த வங்கியின் நிதிநிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதென, இந்திய ரிசர்வ் வங்கி திருப்தியடைந்துவிட்டதாகக் கருத முடியாது. அஜித் பிரசாத் PRESS RELEASE: 2015-2016/581 |