வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் – கபோல் கூட்டுறவு வங்கி லிமிடெட், மும்பாய், மஹாராஷ்டிரா – கால அளவு நீட்டிப்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் – கபோல் கூட்டுறவு வங்கி லிமிடெட், மும்பாய், மஹாராஷ்டிரா – கால அளவு நீட்டிப்பு
செப்டம்பர் 29, 2017 வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி, கபோல் கூட்டுறவு வங்கி, மும்பாய், மஹாராஷ்டிரா வங்கிக்கு, மார்ச் 30, 2017 தேதியில் அளித்த உத்தரவின்படி மார்ச் 30, 2017 அன்று வர்த்தக நேர முடிவிலிருந்து கட்டுப்பாடுகளை விதித்தது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் (பிரிவு 56 உடன் சேர்த்துப் படிக்க) கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மார்ச் 30, 2017ல் மேற்கூறப்பட்டுள்ள வங்கிக்கு வழிகாட்டுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டது. செப்டம்பர் 25,2017 தேதியிட்ட உத்தரவின்படி இது மேலும் 6 மாதங்களுக்கு மார்ச் 31, 2018 வரை மறு ஆய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கப்படுகிறது என்று பொதுமக்களுக்குத் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. செப்டம்பர் 25, 2017 வெளியிடப்பட்ட உத்தரவுகளின் பிரதி, பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் வங்கியின் வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படும். இவ்வாறு, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவின் காலஅளவை நீட்டித்ததை மட்டுமே கருத்தில்கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி இந்த வங்கியின் நிதிநிலை மேம்பாட்டதாக திருப்தியடைந்துவிட்டதெனக் கருதக்கூடாது. (அஜித் பிரசாத்) பத்திரிகை வெளியீடு – 2017-2018/895 |